விதி எண் 110-ன் கீழ் நீதி மற்றும் சிறைத்துறை தொடர்பான பல திட்டங்களை இன்று சட்டபேரவையில் முதல்வர் அறிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதன்படி, சிப்காட் நிறுவனத்தால் 1077 ஏக்கர் பரப்பளவில் திருச்சி மாவட்டம் கண்ணுடையான் பட்டி, கே.பெரியபட்டி, சத்திரப்பட்டி ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்ட தொழில் பூங்கா, ரூ. 96 கோடி செலவில் மேம்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.


அதேப்போல் விழுப்புரம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டு வரும் தொழில் பூங்காவை மேம்படுத்த 52.50 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.


காஞ்சிபுரம் மாவட்டம் ஆலத்தூர் கிராமத்தில் 70.33 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ. 84 கோடி மதிப்பீட்டில் சிட்கோ தொழிற்பேட்டையின் இரண்டாவது பகுதி நிறுவப்படும் எனவும், தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் ரூ. 6 கோடி மதிப்பீட்டில் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இரண்டு குடியிருப்புகள் கட்டப்படும் எனவும், திருப்பூர் பல்லடத்தில் ரூ. 5.20 கோடி செலவில் ஒருங்கினைந்த நீதிமன்றம் கட்டப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.


சிறைச்சாலைகளில் கைப்பேசிகளை பயன்படுத்துவதை தடுப்பதற்கு ஏதுவாக செல்போன் ஜாமர் கருவிகளை சிறைச்சாலைகளில் பொருத்த ரூ. 10 கோடியே 10 லட்சம் ஒதுக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.


அதேவேலையில் மாற்றுத் திறன் பள்ளிகளில் பணிபுரியும் சிறப்பு ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிறப்பு ஊதியம் ரூ. 10 ஆயிரத்தினை 14 ஆயிரமாக உயரத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.