பாமக கட்சியை போல் தங்களுக்கு விருந்த அளிக்க வசதி வாய்ப்புகள் இல்லை என தொல்.திருமா தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமீபத்தில் பாமக சார்பில் தனது கூட்டணி கட்சி தலைவர்களுக்கு தைலாபுரம் தோட்டத்தில் விருந்து அளிக்கப்பட்டது. இதனை சுட்டி காட்டும் விதமாக தனது கூட்டணி கட்சி சகாக்களுக்கு விருந்தளிக்க தனி தோட்டம் இல்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.


விழுப்புரத்தில் நடைப்பெற்ற பழங்குடியினர் மாநாட்டில் பேசிய திருமாவளவன் இவ்வாறு பேசினார். மேலும் பாஜக மற்றும் பாமக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி சேர மாட்டோம் என்று கூறும் துணிச்சல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு மட்டும்தான் உள்ளது எனவும் கூறினார்.


தெடர்ந்து பேசிய அவர்., கூட்டணிக்கு வர எத்தனை கோடி செலவாகும் எங்களுக்குத் தெரியாது. நாங்கள் திமுகக் கூட்டணியில்தான் இருக்கிறோம், ஏனெனில் நாங்கள் சாதாரணமானவர்கள், ஏனெனில் நாங்கள் மதச்சார்பற்ற ஜனநாயகச் சக்திகள், எங்களுக்கு ஒரு நாட்டம் இருக்கிறது, மதவாத சக்திகளை ஆட்சியில் அமரவைக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.


ஒரே சமயத்தில் இங்கும், அங்குமாய் பேசிக்கொண்டிருக்கத் எனக்கு தெரியவில்லை.  விருந்து கொடுக்கவும் தெரியாது. ஏன்னா என்கிட்ட தோட்டம் இல்லை. நாங்கள்லாம் தங்கியிருப்பது பத்துக்கு 10 அறையில், எங்கள் இடத்திற்கு முதல்வர் வருவாரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.