சென்னை: கட்ட பஞ்சாயத்தில் பிரச்சனை.. வி.சி.க பிரமுகர் வெட்டி கொலை
சென்னை கேகே நகரில் ரியல் எஸ்டேட் கட்டப்பஞ்சாயத்து பிரச்சனையில் விசிக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
சென்னை கே.கே.நகர் அம்பேத்கர் குடிசை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் என்கிற மண்டக்குட்டி ரமேஷ் ஆவார். ரமேசுக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது. இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் நிர்வாகியாகவும் இருந்திருக்கிறார். இவர் மீது சென்னையில் பல்வேறு காவல் நிலையங்களில் கொலை முயற்சி, ஆள் கடத்தல், அடிதடி உள்ளிட்ட 8 வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும், சென்னை காவல்துறையில் ஏ கேட்டகிரி ரவுடி பட்டியலிலும் உள்ளார்.
இந்த நிலையில் இன்று காலை கே.கே. நகர், பாரதிதாசன் காலனி பி.எஸ்.என்.எல் அலுவலகம் அருகே டீ குடித்துக் கொண்டிருந்தபோது காரில் வந்த அடையாளம் தெரியாத இரு மர்ம நபர்கள் இவரை சராமாரியாக வெட்டியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே ரமேஷ் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து எம்ஜிஆர் நகர் போலீசார் தகவல் தெரிவிக்கப்பட்டு ரமேசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ரமேஷ் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் ரியல் எஸ்டேட் தொடர்பான கட்டப்பஞ்சாயத்து செய்து வந்துள்ளார். இதனால் பலருடன் முன்விரோதம் இருந்து வந்துள்ளாதக கூறப்படுகிறது. ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக ரமேஷ் கொலை செய்யபப்ட்டுள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலை செய்துவிட்டு தப்பியோடிய இருவரை போலீசார் 4 தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர்.
மேலும் படிக்க | முதலமைச்சரை ஏமாற்றிய மாற்றுத்திறனாளி மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ