தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள உற்பத்தி கூடத்தில் நாளொன்றுக்கு 500 டன் ஆக்ஸிஜன் (Oxygen) உற்பத்தி செய்ய முடியும் என்பதால், ஆக்சிஜன் தயாரிப்பதற்காக ஆலையை இயக்க அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த மனு மீதான விசாரணையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையை பூர்த்தி செய்யும் விதமாக ஸ்டெர்லைட் ஆலையை சில நிபந்தனையுடன் திறக்க அனுமதி அளிக்கலாம் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதற்கு தமிழக அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 


அரசே ஏற்று நடத்தினாலும் தூத்துக்குடியில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும், 2018 ஆம் ஆண்டை போல் மீண்டும் துப்பாக்கி சூடு நடத்த விரும்பவில்லை என தமிழக அரசு பதிலளித்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலையில் (Sterlite Plant) ஆக்சிஜனை தமிழக அரசை உற்பத்தி செய்யலாமே என்று உச்ச நீதி மன்ற கேள்வி எழுப்பிய நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது


இந்த நிலையில் வேதாந்தா நிறுவனம் திடீரென உச்ச நீதிமன்றத்தில் ஒரு பிரமாணப் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில் ஸ்டெர்லைட் ஆலையின் ஆக்ஸிஜனை உற்பத்தி பிரிவை இயக்க தமிழக அரசு  அனுமதி அளிக்கக் கூடாது என்று கூறியுள்ளது


ஸ்டெர்லைட் ஆலையில்  உள்ள ஆக்சிஜன் உற்பத்திக்கான கருவிகளை இயக்க தமிழக அரசிடம் நிபுணர்கள் இல்லை என்றும் எனவே அரசு அதனை மேற்கொண்டால் ஆபத்து வரலாம் என்றும், அந்த மனுவில்  எச்சரிக்கை விடுத்துள்ளது. 


இந்த நிலையில் இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணையில், இது குறித்து என்ன முடிவவை நீதிமன்றம் எடுக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
தமிழகத்தில் ஸ்டெர்லைட் ஆலையால் சுற்று சூழல் பாதிப்பு எனக் கூறி, ஆலையை மூட  வேண்டும் எனக் கோரி தூத்துக்குடி மக்கள் எதிர்த்து போராட்டம் நடத்தினர். 100 நாட்கள் நடந்த போராட்டத்தின் முடிவில், கலவரம் வெடித்தது. போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதை அடுத்து ஸ்டெர்லைட் ஆலை மூடி சீல் வைக்கப்பட்டது.


ALSO READ | நாட்டில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை உள்ள நிலை தமிழக அரசின் நிலைப்பாடு சரியா: SC
 


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR