வேலூர் மாவட்டம் குடியாத்தம் கோபாலபுரம் கவுண்டன்யா மகாநதி கரையில் அமைந்துள்ள கெங்கை அம்மன் கோவில் சிரசு திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. ஆண்டுதோறும் வைகாசி மாதம் நடைபெறும் புகழ்பெற்ற இத் திருவிழாவை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்திருந்தனர். இந்த நிலையில் அம்மனின் சிரசு ஊர்வலம் வெகு விமர்சையாக பக்தர் வெள்ளத்தில் மிதந்து சென்றது. விழாவின் முக்கிய அம்சமான தரணம் பேட்டையில் உள்ள முத்தாலம்மன் ஆலயத்தில் இருந்து அம்மனின் சிரசு குடியாத்தம் நகரில் முக்கிய வீதிகள் வழியாக எடுத்துவரப்பட்டு கோபாலபுரத்தில் உள்ள கெங்கை அம்மன் ஆலயத்தில் உள்ள அம்மன் சிலையில் பொருத்தப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பின்னர் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு அம்மன் கண் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அம்மன் சிரசு ஊர்வலத்தில் போது பக்தர்கள் சாலை நெடுங்கிலும் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்து நேர்த்திக்கடனை செலுத்தி வழிபட்டனர். சிரசு திருவிழாவை காண தமிழகம், ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதனால் குடியாத்தம் நகரமே விழாக்கோலமாக மக்கள் வெள்ளமாக காட்சியளித்தது. 


இத்திருவிழாவை முன்னிட்டு 1200க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பாதுகாப்பு பணியில் 6 ADSP க்கள், 15 DSP க்கள் என ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊர்க்காவல் படையை சேர்ந்த பெண் காவலர் ஒருவருக்கு சாமி அருள் வந்தது. இதனால் சிறிது நேரம் பரபரப்பான சூழல் ஏற்பட்டது அப்பொழுது அவருடன் பணியில் இருந்தவர்கள் அவரை அமைதி படுத்தினர். ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெற்று வரும் இத்திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்கள் சாமியை தரிசனம் செய்து சென்றனர்.


கெங்கை அம்மன் சிரசு திருவிழாவின் வரலாறு: 


தந்தை சொல்லை தட்டாத பரசுராமன் தனது தாயின் தலையை வெட்டி பின் வரம்பெற்று மீண்டும் உயிர்பித்த நிகழ்வு சிரசு திருவிழாவாக கொண்டாப்படுகிறது. முன்னொரு காலத்தில் விதர்ப தேசத்தை ஆண்டுவந்த விஜரவத என்ற அரசன் குழந்தை வரம் வேண்டி பிரம்மனை நோக்கிக் கடும் தவமிருந்தார். அரசனின் தவத்தை மெச்சிய பிரம்மன், ரேணுகா தேவியை மகளாகப் பெற்றெடுக்கும் பாக்கியத்தை அருளினார். பின்னர் ரேணுகா தேவிக்கும் ஜமதக்கனி முனிவருக்கும் திருமணம் ஆனது. இவர்களுக்கு 4 ஆண் பிள்ளைகள் பிறந்தனர்.


ரேணுகா தேவி ஒருநாள் தாமரை குளம் சென்று நீராடிவிட்டு, மண்ணால் ஆன குடத்தை வழக்கம்போல செய்ய முயன்றும் முடியவில்லை. கந்தர்வ உருவத்தால் மெய் மறந்து போனார். நீண்ட நேரம் ஆகியும் வராததால் நடந்ததை தனது ஞான கண்ணால் அறிந்த முனிவர் ஜமதக்கனி, மனைவி கற்பு தவறியதால் அவரின் தலையை வெட்ட தனது 4 மகன்களுக்கு உத்தரவிடுகிறார் அதில் மூன்று மகன்கள் தாயின் மீது உள்ள பாசத்தால் இதை மறுத்ததால் நான்காவது மகன் தந்தை சொல்லை தட்டாமல் தனது தாயின் தலையை வெட்ட செல்கிறார் இதனை அறிந்த ரேணுகாதேவி ஓடிச் சென்று அருகே இருந்த இடுகாட்டில் உள்ள வீட்டில் தஞ்சம் அடைகிறார். அவரை வெட்ட நான்காவது மகன் முயற்சித்த போது இதனை தடுக்க குறுக்கே வந்த வெட்டியானின் மனைவியின் தலையையும் பரசுராமன் வெட்டி விடுகிறார். 


மேலும் படிக்க | கோவையில் பொதுமக்களை ஈர்த்த பஞ்சாபி உணவுத் திருவிழா


தனது தாயின் தலையோடு தந்தை ஜமதக்கனி முனிவரை சென்று சந்திக்கிறார் மகன் பரசுராமன். தனது சொல்லை நிறைவேற்றிய மகனை பாராட்டிய முனிவர் ஜமதக்கனி உனக்கு என்ன வரம் வேண்டும் என கேட்கிறார். அதற்கு தனது தாய் மீண்டும் உயிரோடு வேண்டும் என வரம் கேட்கிறார் மகன் பரசுராமன். வரத்தை முனிவர் ஜமதக்கனி அளிக்கவே மிக வேகமாக சென்று அவசரத்தில் வெட்டியானின் வீட்டில் கிடந்த இரண்டு உடல்களில் வெட்டியானின் மனைவி உடலில் ரேணுகா தேவியின் தலையையும், தாய் ரேணுகா தேவியின் உடலில் வெட்டி யானின் மனைவி தலையையும் என மாற்றி மாற்றி தலையை பொறுத்து விடுகிறார் பரசுராமன். இத்தகைய நிகழ்வு குடியாத்தம் கங்கை அம்மன் சிரசு திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.


மேலும் படிக்க | 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: ஆண்டு வாரியாக தேர்ச்சி விகிதம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ