வேலூர் மாநகருக்குட்பட்ட பகுதியை சேர்ந்தவர் 53 வயதான மீர் பாஹர் அலி. இவர் தனியார் டியூசன் சென்டர் வைத்து நடத்திவருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் மாலை வேளையில் தன்னிடம் டியூஷன் வரும் மாணவ, மாணவிகளுக்கு ஊக்கமூட்டும் வகுப்பு எடுப்ப கூறி மாணவர்களை வரவழைத்துள்ளார். அப்போது தன்னிடம் எட்டாம் வகுப்பு டியூஷன் படிக்கும் 13 வயது சிறுமியிடம் ஆசிரியர் மீர் பாஹர் அலி தகாத முறையில் நடந்துகொண்டதாக கூறப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | அயோத்தி பாபர் மசூதி கட்டுமானம் கிடப்பில் போடப்பட்டது! அறக்கட்டளையின் அறிவிப்பு


அவர் தன்னிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த வேலூர் அனைத்து மகளிர் காவல் துறையினர், டியூசன் சென்டர் நடத்தி வந்த ஆசிரியர் மீர் பாஹர் அலியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்ற காவலில் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். 


மேலும், தற்போது கைதான டியூசன் மாஸ்டர் மீர் பாஹர் அலி, மேலும் சில சிறுமிகளிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இது தொடர்பாகவும் வேலூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுமிகளிடம் 53 வயதான டியூசன் மாஸ்டர் தகாத முறையில் நடந்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க | கருணாநிதி பேனா நினைவுச்சின்னம்... பின்வாங்குகிறதா திமுக அரசு... ஸ்டாலின் திட்டம் என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ