புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியுடன் அதிமுக MLA அன்பழகன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதுச்சேரியின் உப்பளத்தில் இன்று காலை ஊரக வளர்ச்சித்துறை சார்பில் 150-வது காந்தி ஜெயந்தி விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, அதிமுக, காங்கிரஸ் MLA-க்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



இந்நிகழ்ச்சியில் பேசிய அதிமுக MLA அன்பழகன் அவர்கள் தன்னுடைய தொகுதியில் அரசு திட்டங்கள் எல்லாம் கிடப்பில் உள்ளதாவும், ஒன்றுமே நிறைவேற்றப் படவில்லை என்றும் பகிரங்கமாக குற்றம்சாட்டானார். மேலும், கிடப்பில் போடப்பட்ட திட்டங்களையும் அவர் ஆவேசமாக பட்டியலிட்டார். 


MLA அன்பழகனின் இந்த ஆவேசப் பேச்சைக் கேட்ட கிரண்பேடி, அவருக்கு அருகில் வந்து பேசுவதை நிறுத்தும்படியும், பிறகு பேசிக்கொள்ளலாம் என்று சமாதானப்படுத்தினார். ஆனால், அதை கேட்காத MLA அன்பழகன், தொடர்ந்து அரசை விமர்சித்துப் உரையாற்றினார்.


இதனால் அதிருப்தியடைந்த கவர்னர் கிரண்பேடி, மைக்கினை இணைப்பினை துண்டிக்கும்படி ஊழியர்களுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து மைக் ஆப் செய்யப்பட்டது. கிரண்பேடியின் இந்த நடவடிக்கை அன்பழகனுக்கு மேலும் ஆத்திரம் ஏற்படுத்தியது. இதனைதொடர்ந்து கிரண்பேடியுடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 


மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு MLA பேசிக்கொண்டிருக்கும் போது, நீங்கள் எப்படி மைக் ஆப் செய்யலாம். இது தவறு, இவ்வாறு செயல்பட உங்களுக்கு யார் அதிகாரம் அளித்தது என ஆவேசமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இச்சம்பவத்தின் வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன!