பழம்பெரும் திரைப்பட நடிகை, நாட்டிய தாரகை குசலகுமாரி உடல்நலக் குறைவால் மரணம் அடைந்தார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குசலி என்று அழைக்கப்படும் பழம்பெரும் நடிகை குசலகுமாரி, சென்னையில் உள்ள நந்தனத்தில் தனது சகோதரர் வீட்டில் வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த இவர் நேற்று இரவு மரணம் அடைந்தார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இவருக்கு வயது 83.


எம்.ஜி.ஆர். - சிவாஜி இணைந்து நடித்த ஒரேப்படமான டி.ஆர்.ராமண்ணாவின் "கூண்டுக்கிளி" திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர்களில் இவரும் ஒருவர் ஆவார்.


தஞ்சாவூரை பூர்வீகமாக கொண்ட இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் தன் திறமையால் பிரபலமடைந்தவர்.


நடனக் கலையில் சிறந்து விளங்கிய இவர், பராசக்தி, ஹரிச்சந்திரா உள்பட பல படங்களில் நடித்ததோடு 250 படங்களுக்கு மேல் நடனமாடி இருக்கிறார். நடிகை சாவித்திரிக்கு முன்பே மிகவும் வேகமாக கார் ஓட்டும் நடிகை என்று திரைப்பட துறையினரால் பேசப்பட்டவர். கருணாநிதி, நடிப்புலகில் ஜெயலலிதா ஆகியோருடன் மிக நெருக்கமான இருந்தவர். 


திருமணம் செய்துகொள்ளாமல் தனது தம்பி சுந்தரம் குடும்பத்தோடு வாழ்ந்து வந்த இவர் நேற்று இரவு உடல்நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். இவரது மறைவுக்கு திரையுலகம் அஞ்சலில் செலுத்தி வருகிறது.