சந்திராயன் 3 -இல் கிராமப்புற விஞ்ஞானிகளின் பங்கு அதிகம்: திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக துணை வேந்தர்
மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும் வகையில் அரசுக்கு தெரியப்படுத்தி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்: திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கிருஷ்ணன் காட்பாடியில் பேட்டி
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேர்காடு பகுதியில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் இன்று,
மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளான அறிவியல் கண்காட்சி நிகழ்ச்சி பல்கலைக்கழக துணைவேந்தர் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அறிவியல் கண்காட்சியினை துவக்கி வைத்தார். இந்த கண்காட்சியில் 80 க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், தங்களுடைய அறிவியல் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தியதை நேரில் சென்று பார்வையிட்டு மாணவர்களை வெகுவாக பாராட்டினார்.
பின்னர் திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் கிருஷ்ணன் பேசுகையில், “உயர்கல்வி பயிலும் மாணவ மாணவிகளுக்கு மத்திய மாநில அரசுகள் அறிவியல் ஆராய்ச்சிகளில் ஈடுபடவும் கண்டுபிடிப்புகளை மேம்படுத்தவும் அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது இதனை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
உலக அளவில் அதிக அளவில் பேசப்படும் சந்திராயன் 3 ராக்கெட் தயாரித்ததில் கிராமப்புற விஞ்ஞானிகளின் பங்கு அதிக அளவில் இருந்தது. நாட்டில் வேலை வாய்ப்புகளை தேடிச் செல்வதை விட ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தில் இளைஞர்கள் அதிக அளவில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாணவர்களுக்கு கடின உழைப்பு, திறமை, புதிய கண்டுபிடிப்புகள் நேர்மையான வழியில் செல்லுதல் ஆகிய பண்புகள் இருந்தால் இந்தியாவை ஒரு சிறந்த நாடாக மாற்ற முடியும். புதிய கண்டுபிடிப்புகள் கிராமங்களில் உள்ள கடை கோடி மக்களுக்கும் அவை சென்றடைய வேண்டும். அதற்கேற்றாற்போல் தரமான கண்டுபிடிப்புகளில் மாணவர்கள் ஈடுபட வேண்டும்.
மேலும் படிக்க | விஜய்யின் தமிழக வெற்றி கழகம் கட்சியின் முதல் ஆலோசனை கூட்டம்!
நம் நாட்டின் கலாச்சாரம் பண்பாடு ஆகியவற்றை பாதுகாக்கப்பட வேண்டும். நம் நாட்டிலேயே தயாரிக்க கூடிய பல பொருட்களை நாம் உருவாக்க வேண்டும். அதற்கு மாணவர்களின் ஆராய்ச்சி அதிக அளவில் இருக்க வேண்டும். உயிர் கல்வியில் மாணவர்களின் பங்கு அதிக அளவில் இருக்க வேண்டும். இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த ஆசிரியர்கள் முன்வர வேண்டும்.” என்று கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும் வகையில் அரசுக்கு தெரியப்படுத்தி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தில் படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு துவங்க அதிக அளவில் வாய்ப்புகள் இருக்கிறது. அதனை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். புதிய கண்டுபிடிப்புகளுக்கு அதிக ஊக்கம் அளிக்க பல்கலைக்கழகம் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.” என்று கூறினார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ