முதலமைச்சர் பழனிசாமி வயலில் இருப்பது போன்ற படங்கள் வெளியாகியுள்ள நிலையில், அதை குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு பாராட்டியுள்ளார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தை பொங்கல் பண்டிகையை தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் தனது குடும்பத்தினருடன் கொண்டாடிய முதல்வர் பழனிசாமி அங்கு வயலில் இறங்கி வேலை செய்தார். இந்த புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியது. இந்நிலையில், விவசாயியாக இருந்ததை மறக்காமல் இன்றளவும் விவசாயம் செய்யும் தமிழக முதலமைச்சரின் செயல்கள் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக துணை குடியரசுத்தலைவர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார். 


இது குறித்து அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது...... "தன்னுடைய செயல்பாடுகள் மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மக்களை கவர்ந்து அவர்களை ஊக்கப்படுத்தி வருவதாக கூறியுள்ளார். இதனால் மக்கள் நிலையான விவசாயத்தை கையில் எடுத்து அதன்மேல் கவனத்தை செலுத்த வேண்டும்" என்று வெங்கய்யா நாயுடு கேட்டுக்கொண்டுள்ளார்.



மேலும், ஆட்சி செயல்பாடுகள் மூலம் பல்வேறு விருதுகளை மத்திய அரசிடம் இருந்து பெற்று வந்த முதலமைச்சர், இப்போது தம்முடைய தனிப்பட்ட செயல்பாடுகள் மூலம் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்துள்ளார் என்பதற்கான சான்றாக இது அமைந்துள்ளது என்றும் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.