சென்னையில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தலைமையில் சர்க்கரை விலை உயர்வை கண்டித்து, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய விஜயகாந்த் முதலமைச்சர் பழனிசாமியும், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வமும் நல்ல நடிகர்கள் என்று கூறினார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டு பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:-


தமிழகத்தில் உள்ள பழமையான அரசு கட்டடங்கள் மற்றும் பள்ளிகளை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எம்ஜிஆர் நூற்றாண்டு விழா என்ற பெயரில் மக்கள் வரிப்பணத்தை கோடிக்கணக்கில் வீணடிக்கின்றனர். போக்குவரத்து சொத்துக்களை அடமானம் வைத்து தமிழகத்தை ஓட்டாண்டி ஆக்கி விட்டார்கள். முதலமைச்சர் அனுமதியில்லாமல் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் சோதனை நடந்திருக்காது; வருமான வரி சோதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையே. சசிகலா குடும்பத்தினர் கொள்ளையடித்தது இப்போது தான் தெரிகிறதா இவ்வாறு அவர் பேசினார்.


ஆர்ப்பாட்டத்தில் விஜயகாந்த் பேசியதாவது:-
தமிழக ஆளுநர் ஆய்வு மேற்கொண்டது சந்தோஷம் அளிப்பதாகவும்  மாநில சுயாட்சி எங்குள்ளது? என்றும் வினா எழுப்பினர்.


இ.பி.எஸ். மட்டும் ஓ.பி.எஸ். வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்த வேண்டும். அப்போது தான் மக்களுக்கு உண்மை நிலை தெரிய வரும். நியாய விலை கடைகளில் சர்க்கரை விலை உயர்த்தப்பட்டது கண்டிக்கத்தக்கது.
என் பேச்சு நல்லவர்களாகிய மக்களுக்கு தான் புரியும் ஈபிஎஸ் போன்றவர்களுக்கு புரியாது. ரேஷன் கடையில் விற்கப்படும் மசூர் பருப்பை அமைச்சர்கள் வாங்கி சாப்பிடுவார்களா? முதலமைச்சர் பழனிசாமியும், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வமும் நல்ல நடிகர்கள் இவ்வாறு அவர் பேசினார்.