விசிக கட்சிக்கு போட்டி இல்லை! மீண்டும் விஜய்யை தாக்கி பேசிய திருமாவளவன்!
திருமாவளவன் பங்கேற்க உள்ள புத்தக வெளியீட்டு விழாவில் த.வெ.க தலைவர் விஜயும் பங்கேற்க உள்ளதாக வெளியாகும் தகவல் குறித்து திருமாவளவன் பேட்டி அளித்துள்ளார்.
சென்னை தியாகராய நகர் சர்.பிட்டி தியாகராயர் அரங்கில் 'இந்தியன் வங்கி பட்டியல் மற்றும் பழங்குடியின ஊழியர் சங்கத்தின்' பொது மாநாட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியின் நிறைவில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 2011 ம் ஆண்டிலேயே எங்களது கட்சி நிர்வாக அமைப்பை மாற்றி அமைக்க முடிவு செய்தோம். அதன்படி தற்போது 234 சட்டமன்ற தொகுதியையும் தனித்தனி மாவட்டங்களாக அறிவித்து தேர்தல் பணியாற்ற உள்ளோம். பதவிக்காக 234 மா.செயலாளர்களை நியமிக்கவில்லை , கட்சியை வலுப்படுத்தவும், கிராமங்களை அதிகம் சென்று சேரவும் இந்த முடிவை எடுத்துள்ளோம். அம்பேத்கர் குறித்த புத்தக வெளியீட்டு விழாவில் யார்.. யார் பங்கேற்கிறார்கள் என விகடன் நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை.
மேலும் படிக்க | ராணுவ வீரர்களை திடீரென சந்தித்த தவெக தலைவர் விஜய்!! காரணம் என்ன?
அம்பேத்கர் குறித்த புத்தக வெளியீட்டு விழாவில் யாரெல்லாம் பங்கேற்கிறார்கள் என்பதை விகடன் பதிப்பகம் தான் அறிவிக்க வேண்டும். ஆனால் வேண்டுமென்றே ஒரு குழப்பத்தை ஏற்படுத்த வேண்டுமென சிலர், பேசப்பட்டுக் கொண்டிருக்கக்கூடிய தகவலை, உறுதிப்படுத்தப்பட்ட தகவல் போல யார் யார் எல்லாம் வருகிறார் என குறிப்பிட்டு செய்தி வெளியிட்டு இருக்கின்றனர். புத்தக வெளியீட்டு விழாவிற்கு இன்னும் ஒரு மாதம் இருக்கின்றது. புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க ஓராண்டுக்கு முன்பே நான் இசைவளித்து விட்டேன். நான் இசைவளித்தபோது தமிழக முதல்வர் புத்தகத்தை வெளியிட இருப்பதாகவும், ராகுல் காந்திக்கு புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்க இருப்பதாகவும் விகடன் பதிப்பகத்தார் சொல்லியிருந்தார்கள்" என்று கூறினார்.
திருமாவளவன் பேச்சு
முன்னதாக மேடையில் உரையாற்றிய திருமாவளவன், "அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரையை இங்கு பங்கேற்றுள்ள அனைவருக்கும் பரிசாக வழங்கி இருக்கிறீர்கள், அதில் எனக்கு மகிழ்ச்சி. பொதுத்துறையையும், வங்கித்துறையையும் பாதுகாக்க வேண்டுமென்றால் அரசியலமைப்பு சட்டத்தை நாம் பாதுகாக்க வேண்டும். அரசியலமைப்பு சட்டத்திற்கு மிகப்பெரும் அச்சுறுத்தல் எழுந்துள்ளது, இதை இங்கு நான் அரசியலாக கூறவில்லை. அரசியலமைப்புச் சட்டம் நெருக்கடியில் உள்ளது. பிற நாடுகளின் அரசியலமைப்பில் இருந்து மாறுபட்டது இந்திய அரசியலமைப்பு. மற்ற நாடுகளில் இருக்கும் அரசியலமைப்பு மதச் சார்பின்மையை கொள்கை அளவில் மட்டுமே ஏற்றுள்ளது , நம் அரசியலைப்ப்புச் சட்டம் மட்டுமே மதசார்பின்மையை நடைமுறைப்படுத்தும் வலிமையை பெற்றுள்ளது , அது நடைமுறையில் இருந்தால்தான் அரசியலமைப்பு உயிர்ப்புடன் இருக்கும்.
ஒன்றிய அரசு ஒரு மதத்தை சார்ந்து இருக்க கூடாது என்பது அரசியலமைப்பின் நுட்பமான ஒரு புள்ளி, இதற்கான அரசியல் யுத்தம்தான் இந்தியாவில் நடக்கிறது, அதை மாற்றத்தான் முயற்சிக்கின்றனர். சமூக , கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்டோருக்கு அரசியலைப்பு பாதுகாப்பை வழங்குகிறது. பட்டியல் , பழங்குடியின மக்களும் பிற்படுத்தப்பட்டோரே , ஆனால் அவர்கள் ஏற்கனவே அரசியலமைப்பில் தனியாக பட்டியலிடப்பட்டதால் அவர்களை பட்டியலினத்தோர் என்கின்றனர். சமூக நீதி என்பது வெறும் இட ஒதுக்கீடு அல்ல, சமத்துவம் இருக்க வேண்டும், அனைவரும் முன்னேற வேண்டும் என்பதுதான் சமூக நீதி. அனைத்து பொதுத்துறையும் தனியார் மயமாக்கப்படுகிறது. தனியார் மயமாக்கம் என்பது அரசியலப்பு சட்டத்துக்கு எதிரானது" என்று கூறினார்.
விஜய்யை தாக்கிய திருமாவளவன்
எவ்வளவு பெரிய புகழ்பெற்றவர்கள் புதிய கட்சி துவங்கினாலும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சிக்கு போட்டியாளராக ஆகமுடியாது என்று திண்டிவனத்தில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பேசியுள்ளார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மைய மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் திலிபன் அவர்களின் தாய் ரானியம்மாள் படத்திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், தமிழகத்தில் எவ்வளவு பெரிய புகழ் படைத்தவர்கள் புதிய கட்சி துவங்கினாலும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சிக்கு போட்டியாளாராக ஆகமுடியாது என்றும், மேலும் இன்னும் 10 ஆண்டுகள் கழித்து யாரோ ஒருவர் கட்சி துவங்கினாலும் அவர்கள் பெயரை பதிவிட்ட பின்பு தான் விடுதலைச்சிறுத்தைகள் பெயரை பதிவிடுகிரார்கள். ஆகையால் சமுக ஊடங்களில் கவனமாக கையாள வேண்டும் என கட்சியினர்க்கு அறிவுரை வழங்கினார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ