புதுதில்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) திறந்து வைத்தார். பல்வேறு எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்புக்கு இடையே, இந்த கட்டட திறப்பு விழா நடைப்பெற்றது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களும் தொண்டர்களும் எதிர்ப்பு தெரிவித்திருந்னர். இந்த நிலையில் இவ்விழாவை எதிர்த்து தூத்துக்குடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கருப்பு கொடி ஏந்தி கண்டன போராட்டம் நடைப்பெற்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தூத்துக்குடியில் போராட்டம்:


தூத்துக்குடியில் சாவர்க்கர் பிறந்த நாளில் நாடாளுமன்ற புதிய கட்டட திறப்பு விழாவை கண்டித்து மத்திய மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கடற்கரை பகுதியில் கடலில் கருப்பு கொடி ஏந்திய கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.


மத்திய அரசு சார்பில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் இன்று திறந்து வைக்கப்படது சவர்க்கரின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த நாடாளுமன்றம் கட்டிடம் திறக்கப்படுவதை கண்டித்து தமிழக முழுவதும் விடுதலை சிறுத்தை கட்சியினர் கருப்பு சட்டை அணிந்து கருப்பு கொடியேற்றி மே 28 கருப்பு நாளாக கடைப்பிடிக்க விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல் திருமாவளவன் அழைப்பு விடுத்திருந்தார்.


மேலும் படிக்க | அரிசி கொம்பன் யானையால் கதவை அடைத்த அமைச்சர்... செய்தியாளர் சந்திப்பில் பரபரப்பு!


நடுக்கடலில் ஆர்பாட்டம்..


இதைத்தொடர்ந்து தூத்துக்குடியில் மத்திய மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் அகமது இக்பால் தலைமையில் தூத்துக்குடி மோட்டை கோபுரம் கடற்கரை பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கருப்பு கொடியேந்தி கருப்பு சட்டை அணிந்து சாவர்க்கரின் பிறந்தநாளில் நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்படுவதை கண்டித்தும் மதச்சார்பற்றான நாடான இந்தியாவில் பாராளுமன்றத்தில் மத அடையாளத்தை ஏற்படுத்தும் வகையில் செங்கோல் நிறுவப்பட்டதை கண்டித்தும் கடற் பகுதியிலிருந்து படகில் நடுக்கடலுக்கு சென்று விடுதலை சிறுத்தை கட்சியினர் கருப்பு கொடி ஏந்தி கருப்புச்சட்டை அணிந்து மத்திய பாஜக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

செங்கோல் வைக்கப்பட்டது 


புதிய நாடளுமன்ற திறப்பு  விழாவின் போது, ஆங்கிலேயர்களிடம் இருந்து அதிகாரத்தை மாற்றியமைக்காக முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் பெறப்பட்டு அலகாபாத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த தமிழ்நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க 'செங்கோல்' புதிய கட்டிடத்தில் நிறுவப்பட்டது. லோக்சபா சபாநாயகர் நாற்காலிக்கு அருகில் உள்ள அவையில் வைக்கப்பட்டது. இந்த புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவின்போது, நாட்டின் பல்வேறு பகுதியல் அமைந்துள்ள கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் பல்வேறு பொருட்கள் பெறப்பட்டன. 


காலாச்சாரத்தை பறைசாற்றும் பொருடகள்:


கட்டிடத்தில் பயன்படுத்தப்படும் தேக்கு மரங்கள் மகாராஷ்டிராவின் நாக்பூரில் இருந்தும், சிவப்பு மற்றும் வெள்ளை மணற்கல் ராஜஸ்தானில் உள்ள சர்மதுராவிலிருந்து வாங்கப்பட்டது. தேசிய தலைநகரில் உள்ள செங்கோட்டை மற்றும் ஹுமாயூனின் கல்லறைக்கான மணற்கல்களும் சர்மதுராவிலிருந்து பெறப்பட்டதாக அறியப்படுகிறது. கேஷாரியா பச்சைக் கல் உதய்பூரில் இருந்தும், சிவப்பு கிரானைட் அஜ்மீருக்கு அருகிலுள்ள லகாவிலிருந்தும், வெள்ளை பளிங்கு ராஜஸ்தானில் உள்ள அம்பாஜியிலிருந்தும் பெறப்பட்டது.
உத்தரபிரதேசத்தின் மிர்சாபூரில் இருந்து தரைவிரிப்புகள், திரிபுராவில் இருந்து மூங்கில் தரைகள் மற்றும் ராஜஸ்தானில் இருந்து கல் வேலைப்பாடுகளுடன், புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் என பல பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. இவை, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பெறப்பட்டு இந்தியாவின் பல்வேறு கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் வைக்கப்பட்டுள்ளன. 


லோக்சபா மற்றும் ராஜ்யசபா அறைகளில் கூரை வேலைபாடுகளுக்கான எஃகு அமைப்பு, டாமன் மற்றும் டையூ யூனியன் பிரதேசத்திலிருந்து பெறப்பட்டது, அதே நேரத்தில் புதிய கட்டிடத்தில் உள்ள தளபாடங்கள் மும்பையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இக்கட்டடத்தை ஒட்டிய கல் 'ஜாலி' (லேட்டிஸ்) வேலைப்பாடுகள் ராஜஸ்தானின் ராஜ்நகர் மற்றும் உத்தரபிரதேசத்தின் நொய்டாவில் இருந்து பெறப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க | திரிபுரா முதல் தமிழகம் வரை... பல்வேறு கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் புதிய நாடாளுமன்றம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ