நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் விஜய் மக்கள் இயக்கம்: இம்முறையும் `மாஸ்டர்` ஸ்ட்ரோக்கா?
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் விஜய் ரசிகர்களும் இயக்கத்தின் நிர்வாகிகளும் போட்டியிடலாம் என விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் புஸ்ஸி ஆனந்த் அனுமதி அளித்துள்ளார்.
விஜய் ரசிகர்களுக்கு மிகப்பெரிய செய்தி!! நடிகர் விஜய் மக்கள் இயக்கம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிப்ரவரி 19-ஆம் தேதி தமிழகத்தில் நகர்ப்புற பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் விஜய் ரசிகர்களும் இயக்கத்தின் நிர்வாகிகளும் போட்டியிடலாம் என விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் புஸ்ஸி ஆனந்த் அனுமதி அளித்துள்ளார்.
கடந்த முறை நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் போட்டியிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றனர்.
ALSO READ | ஒரே கட்டமாக நடைபெறும் நகர்புற உள்ளாட்சி தேர்தல்
முன்னதாக, ஊரக உள்ளாட்சி தேர்தலில் சுமார் 150க்கும் மேற்பட்ட விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த மன்ற உறுப்பினர்கள் போட்டியிட்டனர். அதில் 120 பேர் வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிட்ட பதவிகளில் வெற்றி பெற்றனர். அவர்கள் அனைவரும் நடிகர் விஜயை சந்தித்து நேரிலும் புகைப்படம் எடுத்துக் கொண்டது நினைவிருக்கலாம்.
இப்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் மாபெரும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் விஜய் மக்கள் இயக்க உறுப்பினர்கள் உள்ளனர்.
இதற்கிடையில், புதன்கிழமை மாலை சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார், நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேதியை அறிவித்தார். மேயர் உள்ளிட்ட 12,820 நகர்புற உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் தமிழகத்தில் ஒரே கட்டமாக நடைபெறுகிறது.
21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 12,820 பதவிகளுக்கான தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தல் முடிந்து 3 நாட்களுக்குப் பிறகு, அதாவது 22 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை .நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ALSO READ | நடிகர் விஜய் தேர்தல் களத்தில் குதிப்பது எப்போது; வெளியானது முக்கிய தகவல்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR