Tamilaga Vettri Kazhagam Latest Update | தமிழ்நாட்டில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சி தொடங்கியிருகிறார் நடிகர் விஜய். அவரது கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் பிரம்மாண்டமாக நடக்கிறது. இதில் கலந்து கொள்ள நடிகர் விஜய் ரசிகர்கள் தமிழ்நாடு முழுவதும் இருந்து விக்கிரவாண்டியில் குழுமியிருக்கின்றனர். லட்சக்கணக்கானோர் திரண்டிருப்பதால் விக்கிவாண்டி சாலையே இப்போது முடங்கியிருக்கிறது. கட்டுக்கடங்காத கூட்டம் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் கடுமையாக ஏற்பட்டிருக்கிறது. சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் அணி வகுத்து நிற்கின்றன. அவசர தேவைக்கு கூட ஆம்புலன்சுகள் செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது. எங்கு பார்த்தாலும் விஜய் கட்சி தொண்டர்களின் தலைகளாகவே இருக்கின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ஒருமணி நேரம் முன்னதாகவே தொடங்கும் தவெக மாநாடு: திடீர் மாற்றம் ஏன்?


தவெக கட்சி கொடியுடன், ’எங்கள் தலைவர், தளபதி நிச்சயம் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறார், 2026ல் எங்க ஆட்சி தான்’ என தொண்டர்கள் பரவசத்துடன் முழக்கமிட்டவாறு மாநாட்டு திடலுக்கு சென்றனர். மாவட்டம் வாரியாக தவெக மாநாட்டில் கலந்து கொண்டிருக்கும் ரசிகர்கள், உணவு மற்றும் குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். கடும் வெயில் அடிப்பதால் நாற்காலிகளையே தலைக்கு பாதுகாப்பாகிக் கொண்டு மாநாட்டு திடலில் அமர்ந்திருகின்றனர். பாதுகாப்பு பணியில் ரசிகர்கள் மற்றும் தனியார் நிறுவன பவுன்சர்கள் நியமிக்கப்பட்டிருந்தாலும் அவர்களால் எல்லாம் இந்த கூட்டத்தை சமாளிக்கவே முடியவில்லை. 


லட்சக்கணக்கில் திரண்டிருக்கும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையும் நெருக்கடியில் இருக்கிறது. விக்கிரவாண்டியில் விஜய் கட்சியின் தவெக மாநாடு நடைபெறும் இடத்தை சுற்றி உணவகங்கள் எல்லாம் அடைக்கப்பட்டிருப்பதால், உணவுக்காக பல கிலோ மீட்டர் தொலைவுக்கு செல்ல வேண்டிய நிலைக்கு விஜய் ரசிகர்கள் தள்ளப்பட்டிருக்கின்றனர். திறந்திருக்கும் ஒருசில மளிகை கடைகளிலும் பீடி, சிகரெட் விற்பனை அமோகமாக இருக்கிறது. ஒரு கட்டு பீடிக்காக விஜய் ரசிகர்கள் பல கிலோ மீட்டர் சென்ற நிகழ்வும் நடந்தது. அதேபோல், மது குடித்துவிட்டு யாரும் மாநாட்டு திடலுக்குள் வரக்கூடாது என விஜய் அறிவுறுத்தியிருந்த நிலையில், மது பாட்டிலோடு சில ரசிகர்கள் மாநாட்டு திடலுக்குள் நாற்காலி மீது ஏறி ஆட்டம் போட்டனர். 


மாநாட்டு திடலுக்கு வெளியே வாகனம் நிறுத்தும் இடத்தில் தாங்கள் வங்கி வந்த பீர், குவார்டர்களை கும்பல் கும்பலாக சேர்ந்து பல ரசிகர்கள் குடித்து கும்மாளம் போட்டனர். திறந்தவெளி பாராகவே சில இடங்கள் மாறியது. பெரும்பாலும் விஜய் கட்சி மாநாட்டில் கலந்து கொண்டிருப்பவர்கள் இளைஞர்கள் என்பதால், அந்த திடலை சுற்றி மது பாட்டில்களும் ஏராளமாக கிடக்கின்றன. குடித்த பீர் பாட்டில்கள் சாலை ஓரங்களிலும் வீசப்பட்டிருக்கிறது. 


மேலும் படிக்க | தவெக மாநாட்டில் விஜய் இன்று பேசப்போகும் 5 முக்கியமான விஷயங்கள்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ