விஜயதசமி விடுமுறை: நாளை பள்ளிகள் திறக்க உத்தரவு!

விஜயதசமி விடுமுறை நாளான நாளை பள்ளிகளை திறக்க பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
விஜயதசமி விடுமுறை நாளான நாளை பள்ளிகளை திறக்க பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அரசு, மற்றும் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் நாளை பள்ளிகளை திறந்து மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் ஞானத்தை அள்ளத் தரும் சரஸ்வதிக்கு உகந்த நாளான நாளை பள்ளியில் சேர்ந்தால் குழந்தையின் கல்வி சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை இருப்பதால் பள்ளிக் கல்வித்துறை இந்த ஏற்பட்டினை செய்துள்ளதாக தெரிகிறது.