12_வது தே.மு.தி.க. மாநில செயற்குழு மற்றும் பொதுக் குழு கூட்டம் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஆனந்தா நகரில் அமைந்துள்ள P.L.P. பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த கூட்டத்திற்கு தே.மு.தி.க.வின் தலைவர் விஜயகாந்த் தலைமை தாங்கினார். தே.மு.தி.க. மாநில செயற்குழு மற்றும் பொதுக் குழு கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த், இளைஞரணி செயலாளர் சுதீஷ் மற்றும் கட்சியின் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தே.மு.தி.க. கட்சியின் தலைவராக இருந்த விஜயகாந்த்தை, கட்சியின் நிரந்தர பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். பின்னர் கட்சியின் துணை செயலாளர்களாக சுதீஷ், பார்த்தசாரதி, ஏ.ஆர்.இளங்கோவன் என 4 பேரை நியமிக்கப்பட்டார்கள்.