தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளாவில் நேற்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 7 மணிவரையில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பல்வேறு அரசியல் கட்சிகளைச் சார்ந்த பிரமுகர்கள், திரைத்துறை பிரபலங்கள், பொதுமக்கள் உள்ளிட்ட வாக்காளர்கள் வாக்களித்துச் சென்றனர். தமிழகத்தில் மாலை 7 மணி நிலவரப்படி 71.79 சதவிகிதம் வாக்குகள் பதிவாகின.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனா (Coronavirus) நோயாளிகளும், தேர்தல் பணியாளர்களும் கவச உடை அணிந்து இறுதி ஒரு மணிநேரத்தின் போது வாக்குப்பதிவை மேற்கொண்டனர். அதேபோல, மாற்றுத் திறனாளிகள் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. தேர்தலில் இளம் வயதுடைய, முதன்முறை வாக்காளர்கள் முதல் 105 முதியவர் வரையில் அனைத்து தரப்பு வாக்காளர்களும் வாக்களித்தனர்.


ALSO READ | சர்ச்சை பேச்சு! உதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!


இந்நிலையில் தே.மு.தி.க. (DMDK) தலைவர் விஜயகாந்த் (Vijayakanth) ஒவ்வொரு தேர்தலின்போதும் தனது மனைவி பிரேமலதா, மகன்கள் விஜயபிரபாகரன், சண்முக பாண்டியன் ஆகியோருடன் சென்னை சாலிகிராமத்தில் உள்ள காவிரி உயர்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிப்பார். ஆனால் இம்முறை விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விருத்தாசலத்தில் வேட்பாளராக களம் இறங்கியதால் அவர் நேற்று காலையிலேயே தனது ஓட்டை பதிவுசெய்துவிட்டு அவசர, அவசரமாக விருத்தாசலம் புறப்பட்டு சென்றார். விஜயகாந்த் மகன்கள் விஜயபிரபாகரன், சண்முக பாண்டியனும் ஒன்றாக வந்து வாக்குப்பதிவு செய்தனர்.


இதற்கிடையில் வாக்களித்த பின்னர் நிருபர்களிடம் பேசிய விஜயபிரபாகரன், விஜயகாந்த் மாலையில் வந்து வாக்களிப்பார் என்று தெரிவித்தார். இதனால் விஜயகாந்தின் வருகையை தேமுதிக நிர்வாகிகளும், தொண்டர்களும் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் கடைசிவரை அவர் வாக்களிக்க வரவில்லை.


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR