விஜயகாந்த மற்றும் இயக்குனர் பாண்டியராஜன் திடீர் சந்திப்பு!!
தமிழ் திரையுலகில் 80களில் தனக்கென ஒரு கோட்டை அமைத்து வெற்றிநடை போட்ட நடிகர், இயக்குனர் மற்றும் பன்முக திறனாளர் பாண்டியராஜன் அவர்கள் இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களை தேமுதிக அலுவலகத்தில் சந்தித்துள்ளார்.
இது விஜயகாந்த் அவர்களின் திரை துறை ரீ-என்ட்ரிக்கான சந்திப்பா? என மக்களிடையே கேள்விகள் எழுந்துள்ளது. இந்த சந்திப்பினை குறித்து விஜயகாந்த் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது
"இயக்குநர்/நடிகர் &திரைத்துறை நண்பருமான திரு.பாண்டியராஜன் அவர்கள், இன்று தேமுதிக தலைமை கழகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தபோது எடுத்த படம்"
என பதிவித்டுள்ளார்.