Seeman Vijayalakshmi Issue: தன்னை திருமணம் செய்து கொள்வதாக சொல்லி ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கடந்த 2011ஆம் ஆண்டு சென்னை வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் நடவடிக்கை வேண்டாம் என தெரிவித்து விட்டு சென்ற நிலையில் கடந்த மாதம் மீண்டும் அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த புகாரின் பேரில் வளசரவாக்கம் போலீசார் நடிகை விஜயலட்சுமியிடம் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து திருவள்ளூர் மகிளா நீதிமன்றம் மாஜிஸ்திரேட் முன்பு வாக்குமூலம் பெறப்பட்டு விஜயலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதையடுத்து, சீமான் இவ்வழக்கில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், கடந்த 16ஆம் தேதி நள்ளிரவில் நடிகை விஜயலட்சுமி சீமான் மீது வழக்கை வாபஸ் பெற்றுக்கொண்டு, பெங்களூருக்கு புறப்பட்டார். 


மேலும், தன்னுடைய தோல்வியை ஒப்புக்கொள்வதாக கூறி அவர் பேட்டியளித்திருந்தார். விஜயலட்சுமி வழக்கை வாபஸ் பெற்றிருந்தாலும், சீமான் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் இன்று ஆஜாராகும் உத்தரவிடப்பட்டது. அதன்பேரில், சீமான் இன்று வளசரவாக்கம் காவல் நிலையத்தில் தனது மனைவி கயல்விழி மற்றும் கட்சியினர் உடன் வருகை தந்து, காவல்துறை முன் ஆஜரானார். 


மேலும் படிக்க | சீமான் மீதான புகாரை திரும்பபெற்ற நடிகை விஜயலட்சுமி - நள்ளிரவில் நடந்தது என்ன?


வீரலட்சுமி வீட்டில் சித்திரவதை


இந்நிலையில், நடிகை விஜயலட்சுமி இன்று வெளியிட்ட வீடியோ ஒன்றில்,"ஊடக நண்பர்களுக்கு எல்லாம் ஒரு விஷயத்தை சொல்ல விரும்புகிறேன். அன்று, வீரலட்சுமி வீட்டில் எங்களுக்கு சாப்பாடு போடாமல், வெளியே போகச்சொல்லி பல சித்திரவதைகள் கொடுக்கப்பட்டதை அடுத்து அதுகுறித்து நான் காவல்துறைக்கு தெரியப்படுத்தினேன், ஆனால் அவர்கள் என்னை அங்கிருந்து அப்புறப்படுத்தும் வேலைகளை செய்யவில்லை. எங்களுக்கு அன்று நேரம் குறைவாகவே இருந்தது. அப்போது சாட்டை துரைமுருகனை (நாம் தமிழர் கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர்) தொலைபேசியில் தொடர்புகொண்டு, வீரலட்சுமி வீட்டில் சந்தித்து வரும் தொந்தரவுகள் குறித்து கூறினேன். அவர் பாலசுப்பிரமணியம் என்ற வழக்கறிஞரை எங்களிடம் அனுப்பிவைத்தார். நான் இன்னும் இரண்டு நாள்கள் இருந்துவிட்டு, மற்ற பணிகளை முடித்துவிட்டு செல்கிறேன் என கூறினேன்.


விஜயலட்சுமி வெளியிட்ட வீடியோ:



அனுப்பிவைத்தவர் சாட்டை துரைமுருகன்


ஆனால், அதனை மறுத்த அவர்கள் நள்ளிரவே புகாரை வாபஸ் பெற்றுக்கொண்டு, கிளம்பும்படி கூறினர். மேலும், என் வங்கிக் கணக்கில் ஒரு ரூ.50 ஆயிரத்தை போட்டுவிட்டு என்னை ஊருக்கு அனுப்பிவைத்தனர். ஆனால், இன்று சீமான் ஏதோ அவர் ஏதும் செய்யாதது போல் பேசிக்கொண்டிருக்கிறார். அவரிடம் மதுரை செல்வம் குறித்து காவல்துறை விசாரணை நடந்தியதா இல்லை மதுரை செல்வம் அங்கு வந்தாரா அல்லது 2011இல் மதுரைக்கு ஐந்து வாட்டி அழைத்துச்சென்ற விஷயம் எல்லாம் வெளியே வந்ததா. இப்போது, சாட்டை துரைமுருகன் நேற்றில் இருந்து என்னோடு பேசிவருவது அனைத்தையும் தொலைப்பேசி பதிவை கண்டாலே தெரிந்துவிடும், அல்லவா. நீங்கள் மான நஷ்ட வழக்கு போட்டால் அனைத்து ஆதாரத்தையும் எடுத்து வந்து குற்றச்சாட்டை நிரூபிக்கிறேன். 12 வருடங்களுக்கு பின் பாலியல் விஷயங்களில் ஒரு பெண்ணால் சிலவற்றை நிரூபிக்க முடியாது என்பது உண்மை தான், ஆனால், நான் சொன்ன மற்ற விஷயங்கள் உண்மை தானே. 


இந்த போர் முடியாது


'நான் மூட வைப்பேன்' என சொல்லி அச்சுறுத்துகிறீர்கள், நீங்கள் காவல்துறையையும் அச்சுறுத்திகின்றனர். அதனால், காவல்துறை என சார்பில் எதுவும் இன்று பேசவில்லை. மதுரை செல்வம் குறித்து விசாரிக்கவில்லை, என்னை 5, 6 முறை மதுரைக்கு அழைத்துச் செல்லப்பட்டேன் என்பது குறித்தும் விசாரிக்கவில்லை.  என்னை இப்போது அனுப்பி வைத்ததே சாட்டை துரைமுருகன் தான். போலீசார் தொலைப்பேசி பதிவு, எனது வாட்ஸ்அப் சேட் அனைத்தையும் ஆய்வு செய்யலாம், இதற்கு சீமான் என்ன சொல்கிறார்?. ஏதோ பொய் சொல்லும் பெண்ணாக என்னை சீமான் சித்தரிக்க முயன்றால் இந்த போர் முடியவே முடியாது என கூறிக்கொள்கிறேன்" என்றார். விஜயலட்சுமி விவகாரம் ஓய்ந்தது என கூறப்பட்ட நிலையில், சீமான் விஷயத்தில் அவர் மீண்டும் முனைப்பு காட்டுவது தற்போது பரபரப்பை உண்டாக்கியுள்ளது.


மேலும் படிக்க | ADMK vs BJP: இறங்கி அடிக்கும் அண்ணாமலை, குமுறலில் அதிமுக: குழப்பத்தில் எடப்பாடி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ