மறைந்த விஜயகாந்த் அவர்களின் உடல் அடக்கம் செய்யப்படும் சந்தனபேழையின் இருபுறமும் கேப்டன் என்ற வார்த்தை பொறிக்கப்பட்டிருக்கிறது. மேலும், தேசிய முற்போக்கு திராவிடர் கழக நிறுவனர், மற்றும் அவரின் பிறப்பு இறப்பு தேதிகள் பொறிக்கப்பட்டிருக்கின்றன. இந்த வாசங்கங்களுடன் விஜயகாந்தின் உடலையும் அந்த சந்தனப்பேழை மண்ணிக்குள் தாங்கிச் செல்ல தயாராக வைக்கப்பட்டிருக்கிறது. இப்போது அவரின் உடல் பூ மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் தீவுத் திடலில் இருந்து கோயம்பேடு நோக்கி சென்று கொண்டிருக்கிறது. வழி நெடுகிலும், சாலையின் இரு புறங்களிலும் பல்லாயிரகணக்கானோர் காத்திருந்து விஜயகாந்த் அவர்களுக்கு இறுதி அஞ்சலியை செலுத்திக் கொண்டிருக்கிறார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | மிஸ் யூ கேப்டன்! கருப்பு MGR விஜயகாந்தை போலவே சினிமாவிலும் அரசியலிலும் தடம் பதித்த நடிகர்கள்


விஜயகாந்த் அவர்களின் இறுதி ஊர்வலத்திலும் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்று இருக்கின்றனர். இதனால் அவரின் உடல் கோயம்பேடு செல்வதில் தாமதம் அடைந்துள்ளது. மிக மெதுவாக ஊர்ந்தபடியே அவரின் வாகனம் சென்று கொண்டிருக்கிறது. மக்களின் கூட்டத்தாலும், போக்குவரத்து நெரிசலாலும் அவரின் இறுதி ஊர்வலம் கண்ணீர் கடலில் மிதந்து பயணிக்கிறது. தீவுத் திடலில் அஞ்சலி செலுத்த முடியாதவர்கள் எல்லாம் சாலையின் நெடுகில் ஒருமுறையாவது விஜயகாந்த் முகத்தை பார்த்துவிட வேண்டும் என்ற பேராவலில் உடன் செல்கின்றனர். 


முக்கிய பிரமுகர்கள் எல்லாம் பிரத்யேகமான வழியில் விஜயகாந்த் உடல் அடக்கம் செய்யப்படும் கோயம்பேடு தேமுதிக தலைமையகத்துக்கு சென்றடைந்திருக்கின்றனர். அதிமுக சார்பில் ஜெயக்குமார், பாஜகவைச் சேர்ந்த பொன் ராதாகிருஷ்ணன், ஓபிஎஸ், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உள்ளிட்ட பலர் அங்கு உள்ளனர். இறுதி மரியாதை செய்வதற்காக காவல்துறை சார்பிலும் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருகிறது. சுமார் 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட இருக்கிறது. 


இதற்காக பிரத்யேகமாக செய்யப்பட்ட சந்தனப்பேழை தயாரிக்கப்பட்டிருக்கிறது. அதில் ஏற்கனவே கூறியதுபோல் புரட்சிக்கலைஞர் மற்றும் கேப்டன் ஆகிய வாசகங்கள் இடம்பெற்றிருக்கின்றன. மக்கள் அன்போடு அழைத்த அவரின் அந்த வாசகங்களை தாங்கிய சந்தனப்பேழை கடைசியாக அவரின் பூத உடலையும் தாங்கிச் செல்ல காத்திருக்கிறது. இந்த உணர்ச்சிமிக்க நிகழ்வை நேரிலும் தொலைக்காட்சிகளும் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். 


மேலும் படிக்க | விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்த வந்த விஜய்-செருப்பை தூக்கியடித்த மர்ம நபர்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ