Miss You Captaiin: கருப்பு எம்ஜிஆர் என்று அழைக்கப்படும் நடிகர் விஜயகாந்த் மறைவை ஒட்டி, தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து திரையரங்குகளில் காலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. கோலிவுட்டுக்கும் தமிழ்நாடு அரசியலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. விஜயகாந்தைப் போலவே பல நடிகர்கள் அரசியலிலும் பிரகாசித்துள்ளனர்
திரையுலகில் ஜாம்பவான்களாக கோலோச்சிய சிலர் சினிமாவில் கால் தடம் பதித்து, தங்கள் இருப்பை பலப்படுத்தியுள்ளனர். ஏனென்றால், தமிழக அரசியலுக்கும் சினிமாவுக்கும் உள்ள தொடர்பு வெகு இயல்பானது. கேப்டன் விஜயகாந்துக்கு ‘கருப்பு எம்ஜிஆர்’ என்ற பெயரும் உண்டு.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்ந்தவர்களில் நூற்றுக்கணக்கானவர்கள் அரசியலிலும் கால் பதித்தாலும், அதில் தடம் பதித்த நடிக நடிகையர்கள் சிலரே. அதில் முக்கியமானவர் விஜயகாந்த். விஜயகாந்தின் சமகாலத்தில் கோலிவுட்டில் இருந்து அரசியலுக்கு வந்த தலைவர்கள் இவர்கள்...
எம்ஜிஆர் ரசிகரான விஜயகாந்திற்கு, கருப்பு எம்ஜிஆர் என்ற பெயர் வந்தது சுவாரசியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. திரைப்பட இயக்குநர் லியாகத் அலிகான் தான், விஜயகாந்த் திரைத்துறையில் முன்னேறிவருவார், எம்ஜிஆர் போல புகழ் பெறுவார் என்ற எண்ணத்தில் இயல்பாக சொன்ன வார்த்தையில் இருந்து அவருக்கு கருப்பு எம்ஜிஆர் என்ற பெயர் வந்ததாம். இது பற்றி சொல்லும் இயக்குநர் லியாகத் அலி கான், MGR சிவப்பாக இருப்பாரே என்ற கேள்விக்கு, இவர் கருப்பு எம்ஜிஆர் என்று சொன்னதாகவும், அந்த பெயர் அவருக்கு பட்டப்பெயராக நிலைத்துவிட்டதாகவும் சொல்கிறார்
2011ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் ஜெயலலிதாவுடன் தேர்தல் கூட்டணி அமைத்து போட்டியிட்ட விஜய்காந்த், அமோக வெற்றி பெற்று தமிழ்நாட்டின் எதிர்கட்சி என்ற அந்தஸ்தையும் தனது கட்சிக்கு பெற்றுத் தந்தார். ஆனால், சட்டசபையில் ஜெயலலிதாவுக்கும் விஜயகாந்துக்கும் இடையே நடந்த வாக்குவாதத்தை தொடர்ந்து விஜயகாந்த் ஜெயலலிதாவிடம் தேமுதிகவுடன் கூட்டணி வைத்திருக்காவிட்டால் நீங்கள் ஆட்சிக்கே வந்திருக்க மாட்டீர்கள் என்று விஜயகாந்த் தைரியமாக சொல்லிவிட்டார். கூட்டணி கட்சிகளுக்குள்ளான மன வேறுபாடு, மிகப் பெரிய அளவில் விரிசலாகி, எதிரிகளாக்கிவிட்டது.
திமுக தலைவர் கருணாநிதிக்கு கலைஞர் என்று பட்டம் இருந்தால், விஜயகாந்திற்கு புரட்சிக் கலைஞர் பட்டம் உண்டு. தி.மு.க. தலைவர் கருணாநிதியுடன் நட்புடன் பழகியவர் விஜயகாந்த், கருணாநிதியின் மறைவுக்கு அவர் எழுதிய இரங்கல் மிகவும் பிரபலமானது... உலகமே உங்களை கலைஞரே ! என்று அழைத்தாலும் உணர்வுப்பூர்வமாக உங்களை அண்ணா என்று வாஞ்சையோடு அழைத்து உங்களுடன் பழகிய அந்த நாட்களை எண்ணி வியக்கிறேன், விம்முகிறேன். தள்ளாத வயதிலும் ஓய்வுக்கே ஓய்வு! என்பதன் அர்த்தத்தை 'உழைப்பு' என்று மாற்றிக்காட்டிய ஒப்பற்ற தலைவரே ! அந்தி சாயும்பொழுது ஒரு சூரியன் மறைவது இயற்கை. ஆனால் 07.08.2018 அன்று மாலை 6.10 மணியளவில் இரு சூரியன் ஒரு சேர மறைந்ததோ! உங்கள் உடல் இவ்வுலகை விட்டு பிரிந்தாலும், உங்கள் சரித்திரம் சகாப்தமாய் என்றும் எங்களுடனேயே இருக்கும் உங்களை வணங்குகிறேன். உங்களின் நினைவாக என்றென்றும்... தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா! என்ற உங்கள் வாசகத்துடன். இப்படிக்கு உங்கள் விஜி என்னும் விஜயகாந்த்
காந்த் என்ற அடைமொழியைக் கொண்ட நடிகர்களான ரஜினிகாந்த் மற்றும் விஜயகாந்த் இருவருமே சினிமாவுக்காக புனைப்பெயர் வைத்துக் கொண்ட நடிகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினியின் இயற்பெயர் சிவாஜி ராவ் கெய்க்வாட். விஜயகாந்தின் பெயர் நாராயணன் விஜயராஜ் அழகர்சாமி. ஆனால், இந்த பெயர்களை விட, கேப்டன் என்ற பெயரே விஜயகாந்தின் அடையாளமானது. அதேபோல, சூப்பர்ஸ்டார் என்றாலே ரஜினிகாந்த் என்று அனைவரும் புரிந்துக் கொள்வார்கள்.
ஒரே காலகட்டத்தில் நடித்து புகழ்பெற்ற கதாநாயகர்களாக வலம் வந்த நடிகர்கள் விஜயகாந்த், ரஜினிகாந்த், கமல்ஹாசன்.
விஜயகாந்தைப் போலவே கமலஹாசனும் அரசியலுக்கு வந்துவிட்டாலும், விஜயகாந்த் பெற்ற வெற்றியை கமல்ஹாசனால் பெறமுடியவில்லை
தனது சக நடிகராக சமகாலத்தில் வலம் வந்த விஜயகாந்தைப் போல அரசியலில் சரத்குமார் சோபிக்க முடியவில்லை
பல்வேறு திறமைகள் இருந்தாலும், விஜயகாந்தின் அரசியல் உச்சத்தை டி.ஆர் எனப்படும், ராஜேந்தர் அவர்களால் எட்ட முடியவில்லை