தொட்டதற்கெல்லாம் ‘லஞ்சம்’வாங்கும் வி.ஏ.ஓ - ஊர் முழுக்க துண்டறிக்கை ஒட்டிய கிராம மக்கள் !
தருமபுரி அருகே பொது மக்களிடம் அதிகமாக லஞ்சம் வாங்கும் கிராம நிர்வாக அலுவலரை கண்டித்து கிராமம் முழுவதும் விழிப்புணர்வு துண்டறிக்கை ஒட்டி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த சில்லாரஹள்ளி வருவாய் கிராமத்தை உள்ளடக்கி 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் 2500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். சில்லாரஹள்ளி வருவாய் கிராமத்தில்தான், கிராம நிர்வாக அலுவலகம் அமைந்துள்ளது. இங்குள்ள மக்கள் அரசின் திட்டங்கள், சலுகைகளை பெறுவதற்கு வருவாய்த்துறை மூலம் பெறப்படும் சான்றிதழ்களை வாங்க கிராம நிர்வாக அலுவலகத்துக்குச் சென்று வருவது வழக்கம். ஆனால் இங்கு பணியாற்றும் கிராம நிர்வாக அலுவலர் பரமசிவம் மற்றும் உதவியாளர் ஜெயந்தி இருவரும் பொதுமக்களுக்கு செய்யக்கூடிய அனைத்து பணிகளுக்கும் லஞ்சம் கேட்பதாகப் புகார் எழுந்துள்ளது.இதில் சான்றிதழ்களின் தன்மையைப் பொருத்து லஞ்சப்பணம் குறைவாகவும், அதிகமாகவும் கேட்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
முதியோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் ஒரு மனுதாரரிடம் 5000 வரை கொடுத்தால் மட்டுமே அந்த மனுக்களை பரிந்துரை செய்வதாகவும், பிறப்பு, இறப்பு சான்றிதழ் வாரிசு மற்றும் ஆதரவற்ற விதவை சான்றிதழ் பெற சுமார் 50,000 ரூபாய் வரையிலும், நிலம் அளவீடு செய்யும் பணிக்கு 10 ஆயிரம் வரையிலும் லஞ்சம் கேட்பதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் அவர்கள் கேட்கும் படி லஞ்சப் பணம் கொடுக்கவில்லை என்றால் அவர்களுக்கு வேலை செய்து கொடுக்காமல் நீண்ட நாட்களாக அலைக்கழிப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கிராம நிர்வாக அலுவலர் பொதுமக்களிடம் அதிகப்படியாக லஞ்சம் பெறுவதாக தருமபுரி மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.தொடர்ந்து ஊழல் தடுப்புப் பிரிவினர் கொடுத்த துண்டறிக்கைகளைக் கிராமம் முழுவதும் இளைஞர்கள் ஒட்டி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க | ‘வேலியே பயிரை மேய்ந்த கதை’ - பள்ளி மாணவியை கடத்திய வாத்தியார்!
அதிகப்படியாக லஞ்சம் பெறுகின்ற கிராம நிர்வாக அலுவலர் பரமசிவம் அவரது உதவியாளர் ஜெயந்தி இருவரையும் உடனடியாக பணி இட மாற்றம் செய்து, தங்கள் கிராமத்திற்கு நேர்மையாக பணிபுரியும் அலுவலர்களை பணி அமர்த்த வேண்டும் என கேட்டு மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR