எந்த பண்டிகை என்றாலும் புத்தாடை பலகாரம் விருந்து என இருந்தாலும் தீபாவளிக்கு உள்ள சிறப்பு பட்டாசு சிறியவர் முதல் பெரியவர் வரை தீபாவளி அன்று பட்டாசு வெடிக்காதவர்களே இருக்க முடியாது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த பட்டாசு உற்பத்தி தொழிலிலுக்கு பின்னால் எண்ணன்ற தொழிலாளர் குடும்பங்களின் வாழ்வாதாரமும் நம்பியிருக்கிறது. இப்படி அனைவரும் விரும்பும் பட்டாசு வெடிக்கும் பழக்கத்தை தவிர்த்து தமிழகத்தில் பட்டாசு வெடிக்காமல் பசுமை தீபாவளி (Diwali) கொண்டாடும் கிராமங்களும் உள்ளது.


ALSO READ | தீபாவளிக்குள் ரூ.50,000-ஐ தொடுமா தங்கத்தின் விலை? இப்போது வாங்கினால் லாபம் காணலாமா?


இந்த உலகம் நமக்கு மட்டும் சொந்தமானது அல்ல பறவைகள் விலங்குகள் என அனைத்து உயிரினங்களுக்கும் சொந்தமானது. விலங்குகள், பறவைகளுக்கு தொந்தரவு தராமல் பசுமை தீபாவளி கொண்டாடி மகிழும் கிராமங்களில் சில...


1.ஈரோடு மாவட்டம் வெள்ளோடு ஊராட்சிக்குட்பட்ட செல்லம் பாளையம், தட்சன் கரைவழி,வடமுகம் கிராம பகுதிகள் .
2. நெல்லை மாவட்டம் கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் உள்ள கிராமம்.
3 புதுச்சேரி அருகே கழுப்பெரும்பாக்கம் கிராமம் 
4. சிவகங்கை மாவட்டம் செல்லுகுடி பட்டி கிராமம்
5 .வேலூர் மாவட்டம் குடியாத்தம்குக் கிராமம்
6. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் பெரம்பூர் கிராமம் பறவைகள் சரணாலயம்.
7. திருப்பத்தூர் மதுரை ரோட்டில் உள்ள வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள கிராமம்.
8. கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் அருகே கொளதாசபுரம் கிராமம்.
9. நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அருகிலுள்ள முள்ளுக்குறிச்சி கிராமப் பகுதி.
10. தர்மபுரி மாவட்டம் 60 கிலோ மீட்டர் அருகில் உள்ள வேப்பம்பட்டி கிராமம்.
11. திருச்சி திண்டுக்கல் சாலையில் உள்ள தோப்புபட்டி சம்பட்டி கிராமப் பகுதி.
12.ராமநாதபுரம் மாவட்டம் தேர்தங்கல் பகுதி மேல செவ்வனுர் கிராமம் ம சித்திரக்குடி.
13 .கோவை மாவட்டம் சூலூர் தாலுகா கருமத்தம்பட்டி அன்னூர் சாலையில் உள்ள கிட்டமா பாளையம் கிராமம்...
14.கடலூர் மாவட்டம் அடரி மற்றும் கொரக்கை


ALSO READ | Diwali 2021: ஆஸ்துமாவை பரப்பும் பட்டாசுகளை இந்தியாவுக்கு அனுப்புகிறதா சீனா?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR