கிழக்கு மகாராஷ்டிராவில் உள்ள பங்கேடாவில் நேற்று 'கடினாஷினி' எனும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளாமான சிந்தி சமூகத்தை சேர்ந்த மக்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பங்கேற்று உரையாற்றினார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அப்போது பேசிய அவர், ''இந்தியா பல மொழிகள் பேசும் நாடு, இங்கு உள்ள அனைத்து மொழிகளுக்கும் அதன் சொந்த முக்கியத்துவம் உள்ளது. தற்போது ஆட்சியில் உள்ள பாஜக அரசாக இருந்தாலும் சரி, அல்லது வேறு அரசாங்கமாக இருந்தாலும் சரி, அது சமூகத்தின் அழுத்தத்தின் அடிப்படையிலேயே செயல்படுகிறது. 


ஒரு அரசாங்கத்திற்கு சமூக அழுத்தம் என்பது பெட்ரோலை போன்றது. எனவே சிந்தி பல்கலைக்கழகம் எனும் உங்கள் கோரிக்கை நிறைவேற வேண்டும் என்றால் அரசுக்கு சிந்தி சமூக மக்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும். 


மேலும் படிக்க | ‘மகாத்மா காந்தி ஒரு ஆச்சாரமான தீவிர இந்து’ - மோகன் பகவத்


வன்முறையால் நாட்டில் யாருக்கும் எந்த பயனும் இல்லை. அதுமட்டுமல்லாமல், வன்முறையை விரும்பும் சமுதாயம் அதன் கடைசி நாட்களை தற்போது எண்ணிக்கொண்டிருக்கிறது. 


எனவே, நாட்டு மக்களாகிய நம் அனைவரும் எப்போதும் வன்முறையற்றவர்களாகவும், அமைதியை விரும்புகிறவர்களாகவும் இருக்க வேண்டும். அதற்கு மனித நேயத்தை காத்து அனைத்து சமூகங்களையும் ஒன்றிணைப்பது அவசியம். அகிம்சை மற்றும் அமைதியை விரும்புபவர்கள் மட்டுமே என்றும் நிலைத்து இருப்பார்கள்.'' இவ்வாறு மோகன் பகவத் பேசினார். 


 



 


இந்த நிலையில் மோகன்பகவத்தின் உரையை குறிப்பிட்டு ட்விட்டரில் பதிவிட்டுள்ள தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ.தங்கராஜ், ''வன்முறை யாருக்கும் பயனளிக்காது என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியிருப்பது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது'' என விமர்சித்துள்ளார். 


மேலும் அவரது இந்த பதிவில் பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் ஆகியோரின் ட்விட்டர் பக்கங்களை குறிப்பிட்டு மனோ தங்கராஜ் பகிர்ந்துள்ளார். 


மேலும் படிக்க | நான் ஜனாதிபதியா? ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பதில்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYe