TN Latest News: மதுரை திருப்பரங்குன்றம் சன்னதி தெருவில் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் போட்டியிடும் நிலையில் அவரை ஆதரித்து கொட்டு முரசு கொட்டியபடி வீதி வீதியாக அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினருமான ராஜன் செல்லப்பா வாக்கு சேகரித்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அங்குள்ள கோவில் வாசலில் உள்ள  பூக்கடை வியாபாரிகளிடம் பூக்கள் வியாபாரம் குறித்தும் பூக்களை அளப்பது போன்றும் வணிகர்கள், வியாபாரிகள் மற்றும் கோவில் சுற்றி உள்ள சுப்பிரமணியசாமி திருக்கோவில் பட்டர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.


இதனை தொடர்ந்து செய்தியாளரை சந்தித்து பேசுகையில்,"டெல்லியில் இருந்து வருகிறார்கள், ஆனால் எந்த ஒரு திட்டத்தையும் செய்யாமல் ரோடு ஷோ மட்டும் நடத்துகிறார்கள் என்று பொதுச் செயலாளர் விமர்சனம் செய்தார். அண்ணாமலையை தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்யவில்லை. அண்ணாமலையுடைய பாணி அடுத்தவர்களை விமர்சனம் செய்வது, அதன்பிறகு பின்வாங்குவது. 


பிரதமர் வருகையால் என்ன பிரயோஜனம்


செய்தியாளரை சந்தித்தால் ஏதாவது உதாரணம் சொல்வது. எடப்பாடி சொன்ன வார்த்தையில் என்ன தவறு உள்ளது. பிரதமரோ அமித் ஷாவோ வருகையால் என்ன பிரயோஜனம் என்று கேள்வி எழுப்பினார்...? ரோட் ஷோ நடத்துவதால் பாதுகாப்பு கருதி மக்களை குறைக்கிறார்கள். இன்றைக்கு பாஜக தலைவர்கள் ரோட் ஷோ நடத்துவது வெறும் காட்சி பொருள்தான்.


மேலும் படிக்க | மோடி தமிழர்களின் மனதில் நிற்கமாட்டார் - மா.சுப்பிரமணியன்


மக்கள் மத்தியில் ஒரு காட்சி பொருளாகதான் இருக்க முடியுமே தவிர... அவர்களே ரோட் ஷா என்று கூறி விட்டார்கள், இது சாலை காட்சியை தவிர மக்களுக்கான திட்டம் இல்லை. மக்களுக்கான செயல்முறை இல்லை, மக்களுக்கான விளம்பரம் இல்லை. 


'அவர் எதற்கு போராளி...'


ஒரு போராளி எங்களுக்கு எதற்கு... மதுரைக்கு நல்ல திட்டங்களை செய்ய வேண்டும். அவர் எதற்கு போராளி தனிப்பட்ட ஒருவரை வாழ்த்தியிருக்கிறார் கவிதையும் கதையும் எழுதுகிறார். எந்தத் துறையில் அவர் போராளி? மக்களுக்கான நலத்திட்டங்களை பெற்றுத் தருவதில் போராளியா? ஐந்து ஆண்டுகளில் மக்களை சந்தித்தாரா? ஆட்சி காலம் முடியும் தருவாயில் நான்கு நிழற்குடையை தந்திருக்கிறார். 


பாராளுமன்றத்தில் மக்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியை ஒரு உறுப்பினர் செலவழிக்கவில்லை என்றால் அது மீண்டும் பாராளுமன்றத்திற்கு சென்றுவிடும். ஒரு சாதாரண 20 கோடி ரூபாயை செலவழிக்க முடியாதவர் ஒரு நல்ல நிர்வாகியாக இருக்க முடியாது. மேலூரில் காவேரி, முல்லைப் பெரியாறு பிரச்சினைகளில் போராட்டம் நடந்தது. இந்த ஐந்து ஆண்டுகளில் ஏதேனும் போராட்டத்தில் கலந்து கொண்டாரா? நாடாளுமன்றத்தில் ஒரே ஒரு முறை காந்தி சிலை முன்பு திமுக மற்றும் கூட்டணி கட்சிக்காக போராடினார், மக்களுக்காக அல்ல.


ஒரே கதை மீண்டும், மீண்டும்


பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தவில்லை. எப்போது பார்த்தாலும் இரண்டே இரண்டு பாயிண்ட் தான் பேசுகிறார். திமுக ஆட்சியில் முதல் பட்ஜெட்டில் உயர் மட்ட பாலம் செயல்படுவதாக அமைச்சர் பிடிஆர் அறிவித்தார் அந்தத் திட்டம் இன்றைக்கு முடக்கப்பட்டுள்ளது. சு.வெங்கடேசன் எப்போது பார்த்தாலும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையையும், மதுரை விமான நிலையத்தையும் குறித்து தான் பேசுகிறார். அது இரண்டும் விருதுநகர் நாடாளுமன்றத்தில் வருகிறது. எங்கள் வேட்பாளர் விஜய பிரபாகரன் கொடி தூக்கப் போகிறார், வெற்றி பெறப் போகிறார். 


மேலும் படிக்க | ''தமிழ்நாட்டிற்கு குறைந்த நிதியே ஒதுக்கப்படுகிறது'' - எ.வ.வேலு


எய்ம்ஸ் மருத்துவமனையும் சரி, மதுரை விமான நிலையம் சரி அவற்றை கொண்டாடுவதற்கு மதுரை நாடாளுமன்ற உரிமை இல்லை. சு வெங்கடேசனை பொருத்தவரை எழுதிய கதை சிறப்பான கதை என்று யாரும் சொல்லவில்லை. காவல் கோட்டம் என்ற ஒரே ஒரு கதை எழுதி சாகித்ய அகாடமி பெற்று எந்த பிரயோஜனமும் இல்லை. 


அதையே திரும்பத் திரும்ப வைத்து கதை எழுதுகிறார். அந்த கதையை மக்கள் நம்ப தயாராக இல்லை. சு வெங்கடேசனுக்கு நாடாளுமன்ற மக்கள் பணி சரிவராது. அவர் கதை எழுத போகலாம். கீழடி பற்றி அடிக்கடி பேசுவார், கீழடியும் மதுரை நாடாளுமன்ற தொகுதி அல்ல சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி.


அதிமுகவில் பொலிவு கூடியிருக்கிறது


எங்கள் கூட்டணி வலிமையுள்ள மக்கள் கூட்டணியாக மாறி உள்ளது. அதிமுகவுக்கு கூட்டணி இல்லை என அனைவரும் நினைத்தார்கள். ஆனால் இன்றைக்கு வலிமையான கூட்டணியாக உள்ளது. மக்களுடைய மனநிலை எப்போது வேண்டுமானாலும் மாறலாம். அரசியல்வாதிகள் 30 விழுக்காடு தான் உள்ளோம். மக்கள் 70 விழுக்காடு உள்ளனர். 


மக்கள் அப்படியே மாறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. மக்கள் இன்றைக்கு மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். அதிமுகவிற்கு வலிமை மற்றும் பொலிவு கூடி இருக்கிறது. இந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும்.


பாஜக குறித்த கேள்விக்கு...


பாஜகவை நாங்கள் கன்சிடர் பண்ணவில்லை. அண்ணாமலையை தலைவராக நாங்களும் மக்களும் ஏற்றுக்கொள்ளவில்லை, அவருடைய காலக்கெடு இந்த தேர்தலுடன் முடிவடைகிறது. அண்ணாமலை யாரால் வளர்க்கப்படுகிறாரோ அவராலே அந்த கால் இறக்கப்படும் ஏணியை போல அண்ணாமலை பற்றி விமர்சனம் செய்ய அவசியம் இல்லை. 


மூணு நாலு அஞ்சு இடத்திற்கு வருபவர்களை பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை. திமுக, ஸ்டாலின் பேசியது குறித்த கேள்விக்கு பதில் அளிப்போம். ஆனால், பாஜகவுக்கு, பாஜக தலைவருக்கோ பதில் சொல்ல வேண்டிய அவசியம், சீன்ல இல்ல. திருப்பரங்குன்றம் தொகுதியில் 297 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளது எந்த வாக்குச்சாவடியில் பாஜக நிர்வாகிகள் 5 அல்லது 10 பேரோ நிரப்புகிறார்கள்.? 297 வாக்குச்சாவடியில் 50 வாக்குச்சாவடியில் அவருடைய தலைவர்கள்தான் இருப்பார்கள். வாக்குச்சாவடி மையங்களில் ஏஜென்ட் போட ஆளில்லாத கட்சியை பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை" என்றார்.


மேலும் படிக்க | திருப்பரங்குன்றம் மலையில் நடைபெற்ற ரம்ஜான் சிறப்பு தொழுகை..!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ