விருதுநகர் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்கள் பயன்படுத்திய செல்போன்கள் மடிக்கணினிகள் உள்ளிட்டவற்றை சைபர் கிரைம் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விருதுநகரில் இளம்பெண் பாலியல் வழக்கில் கைதான 8 நபர்களின் வீடுகளில் சுமார் 7 மணி நேரத்திற்கு மேலாக சிபிசிஐடி போலீசார் நடத்திய சோதனையில், சிபிசிஐடி கைப்பற்றப்பட்ட செல்போன், மடிக்கணினி ஆகியவற்றை சைபர் கிரைம் பிரிவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.


மேலும் படிக்க | பள்ளி மாணவர்களிடையே ஜாதி மோதல்!


விருதுநகரில் இளம்பெண் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட வழக்கில் பள்ளி மாணவர்கள் 4 பேர் உள்பட 8 பேரை கடந்த மார்ச் 22ஆம் தேதி விருதுநகர் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது.



இந்த நிலையில் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஹரிஹரன், ஜுனத் அகமது உள்ளிட்ட 8 பேரின் வீடுகளில் சிபிசிஐடி போலீசார் 5 குழுக்களாக சென்று சோதனை மேற்கொண்டர். மேலும், அவர்களின் பெற்றோரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட 8 பேரின் வீட்டில் சோதனை மேற்கொண்ட சிபிசிஐடி போலீசார், அவர்கள் பயன்படுத்திய கைபேசி, மடிக்கணினி உள்ளிட்ட பொருள்களை தீவிரமாக பரிசோதனை செய்து வருகின்றனர். மேலும், அவர்களின் செல்போனில் உள்ள வாட்ஸ்-அப் கணக்கை வைத்து சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மேலும் படிக்க | 13 வயது மாணவிக்கு 55 வயது ஆசிரியர் பாலியல் தொல்லை - வேலியே பயிரை மேய்ந்த அவலம்!


மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் 2 வது நாளாக சிபிசிஐடி போலீசார்  விசாரணை நடத்தினர். மேலும், கைதான நபர்களின் வீடுகள், பாலியல் வன்கொடுமை நடந்த இடங்களில் உள்ள தடயங்களை சைபர் கிரைம் போலீசார் கைப்பற்றினர். பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்களை யார் யாருக்கு எப்போது பகிரப்பட்டுள்ளது என்பது குறித்தும் இதில் தொடர்புள்ள நபர்கள் யார் யார் என்பது குறித்தும் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR