பள்ளி மாணவர்களிடையே ஜாதி மோதல்!

குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்த பள்ளி மாணவர்களை அதே பள்ளியை சேர்ந்த வேறு ஜாதி மாணவர்கள் இழிவாக பேசியதால் அவர்கள் தங்கள் பெற்றோருடன் பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Written by - Dayana Rosilin | Last Updated : Mar 27, 2022, 12:26 PM IST
  • பள்ளி மாணவர்களிடையே சமூக ரீதியான மோதல்
  • இழிவாக பேசியதாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் புகார்
  • பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்
பள்ளி மாணவர்களிடையே ஜாதி மோதல்! title=

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர்  அருகே அருந்ததியர் காலணி உள்ளது. இங்கு 100-க்கும்  மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த குடும்பங்களை சேர்ந்த குழந்தைகள், அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனர். அதே பள்ளியில் வேறு சமூகத்தை சேர்ந்த மாணவர்களும் படித்து வருகின்றனர். இவர்களுக்கு இடையே அடிக்கடி சமூக ரீதியான பிளர்வுகளை ஏற்படுத்தும் வகையில் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க | ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்! மனித ரத்தத்தில் கலக்கும் பிளாஸ்டிக்!

இது குறித்து பாதிக்கப்பட்ட குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் பள்ளி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால், தொடர்ந்து பாதிப்புக்கு ஆளாகி வந்த மாணவர்கள் 25க்கும் மேற்பட்டோர் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அந்த மாணவர்களும், அவர்களின் பெற்றோரும் பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், வரும் 28ஆம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாச்சியார் அலுவலகத்தில் சமாதான ஆலோசனை கூட்டம் நடத்தி இதற்கு தீர்வு காணலாம் என கூறியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. 

மேலும் படிக்க | வைகை ஆற்றில் வாடிவாசல் - காளைகளை அடக்கி விளையாடும் சிறுவர்கள்

பள்ளிகளில் ஒற்றுமையும், சமத்துவமும் கற்பிக்கப்பட்டு வரும் நிலையில் அங்கேயே இதுபோன்ற பிரிவினைவாத எண்ணங்களும், பிரச்சனைகளும் வலுபெறுவது சமூகத்திற்கு நல்ல பலனை அளிக்காது என ஆசிரியர்களும், பெற்றோரும் கருத்துத் தெரிவித்துள்ளனர். ஆதே நேரம் மாணவர்களிடையே இதுபோன்ற எண்ணங்கள் ஊக்குவிக்கப்பட்டு கலவரத்தையே தூண்டும் அளவிற்கு பிரச்சனை வலுபெற்றுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும். பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.  

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News