எம்.ஜி.ஆர் நினைவில்லத்தில் `அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா’ என கல்வெட்டு: ஆட்டம் ஆரம்பமா?
அதிமுக பொன்விழாவை ஒட்டி, சசிகலா இன்று எம்.ஜி.ஆர் நினைவில்லத்தில் அவரது திருவுருவச் செலைக்கு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதோடு அதிமுக கொடியையும் ஏற்றி வைத்தார்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்-ஆல் தொடக்கிவைக்கப்பட்ட அதிமுக கட்சி இன்றோடு நாற்பத்தி ஒன்பது ஆண்டுகளை நிறைவு செய்து ஐம்பதாவது ஆண்டை தொடங்குகிறது. இந்த நிகழ்வை சிறப்பாக கொண்டாட, அதிமுக சார்பில் பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதிமுக பொன்விழாவை ஒட்டி, சசிகலா (Sasikala) இன்று எம்.ஜி.ஆர் நினைவில்லத்தில் அவரது திருவுருவச் செலைக்கு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதோடு அதிமுக கொடியையும் ஏற்றி வைத்தார்.
சசிகலா தரப்பு சார்பாக, அதிமுக பொன்விழா ஆண்டை ஒட்டி, சென்னை தி. நகரில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்தில் ‘அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா’ என பொறிக்கப்பட்ட கல்வெட்டு வைக்கப்பட்டது.
அதிமுக 50 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தருணத்தை கொண்டாடும் வகையில், அதிமுக பல ஏற்பாடுகளை செய்துள்ளது. அதிமுக தலைவர்களும் தொண்டர்களும் தமிழகம் முழுவதும் பொன்விழா ஆண்டை கொண்டாடி வருகின்றனர்.
ALSO READ: மீண்டும் அரசியலில் நுழைகிறாரா சசிகலா? அம்மாவுக்கு அஞ்சலி செலுத்தி ஆரம்பமா?
இந்த நிலையில், எம்.ஜி.ஆர் நினைவில்லத்தில், சசிகலா பெயரிட்ட கல்வெட்டு பொறிக்கப்பட்டது அதிமுக தலைமை மற்றும் தொண்டர்களுக்கு இடையே பெரும் சலசலப்பையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சமீப காலங்களில் அவர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டிகளிலும், தொண்டர்களிடம் மேற்கொண்ட உரையாடல்களிலும், அதிமுக தொண்டர்களின் இயக்கம் என்பதை பலமுறை குறிப்பிட்டி பேசியுள்ளார். தொண்டர்களை கவனிக்காமல் நடந்துகொண்டால், அது கட்சியை பாதிக்கும் என்றும், தற்போது உள்ள கட்சி தலைமை, தொண்டர்களுக்கு ஏதுவான சூழலை அமைத்து தரவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உண்மையான அதிமுக (AIADMK) தொண்டர்கள் கவலை கொள்ள வேண்டாம் என்றும், தான் விரைவில் வந்து அனைவரையும் சந்திப்பதாகவும், கட்சியை மீண்டும் பழைய நிலைக்கு உயர்த்தப்போவதாகவும் அவர் பலமுறை கூறியுள்ளார்.
இதற்கிடையில், சமீபத்தில் நடந்துமுடிந்த உள்ளாட்சித் தேர்தலின் (Local Body Elections) முடிவுகள் வந்துவிட்டன. இந்த தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்துள்ளது. தற்போது சசிகலா தன் எண்ணத்தையும் வருங்கால திட்டங்களையும் அறிவித்து வருவதும், தொண்டர்களின் ஆதரவை கோரி வருவதும், அரசியல் வட்டங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
ALSO READ: AIADMK: ஜெயலலிதா சமாதியில் தியானம் கலைந்த சசிகலாவின் அஞ்சலி! நடந்தது என்ன?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR