ஓட்டுக்காக எம்எல்ஏ மனைவி கொடுத்த சேலைகளை குப்பையில் வீசிய வாக்காளர்கள்
சுயேட்சை வேட்பாளர் ஓட்டுக்கு கொடுத்த சேலைகளை குப்பையில் வீசிய வாக்காளர்கள். தங்களுக்கு பாதுகாப்பு வேண்டி கானத்தூர் காவல் நிலையத்தில் அப்பகுதி பெண்கள் புகார் அளித்துள்ளனர்.
சென்னை மாநகராட்சி மண்டலம் 15-க்கு உட்பட்ட 197வது வார்டில் பணையூரில் சுயேட்சையாக போட்டியிட்டவர் மகாலக்ஷ்மி பாபு. இவரது கணவர் பனையூர் பாபு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இவர் கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக செய்யூர் தொகுதியில் வெற்றி பெற்றார்.
இந்நிலையில், 197-வது வார்டில் திமுக கூட்டனியில் எம்எல்ஏ மனைவி மகாலட்சுமிக்கு விசிக சார்பாக போட்டியிடுவதற்காக சீட் ஒதுக்க கேட்டுள்ளார். சோழிங்கநல்லூர் தொகுதியில் பள்ளிகாரணை பகுதியில் விசிகவிற்கு சீட் ஏற்கனவே ஒதுக்கப்பட்டதால் 197-வது வார்டில் திமுகவை சேர்ந்தவர்க்கு சீட் ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில் எம்எல்ஏ மனைவிக்கு சீட் ஒதுக்காததால் சுயேட்சையாக மகாலட்சுமி போட்டியிட்டார். இவர் அப்பகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு பொங்கல் பரிசு என கூறி முன்னதாக புடவைகளை வழங்கியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அப்பகுதியில் போட்டியிட்ட அதிமுக-வை சேர்ந்த மேனகா ஷங்கர் என்பவர் வெற்றி பெற்றுள்ளார்.
மேலும் படிக்க: சென்னை மேயர் பதவி யாருக்கு?
இதனை அப்பகுதி மக்கள் இனிப்பு வழங்கி நேற்று கொண்டாடியுள்ளனர். அந்த நேரத்தில் அவ்வழியே சென்ற தோற்றுப்போன சுயேச்சை வேட்பாளர் எம்எல்ஏவின் மனைவி மகாலக்ஷ்மி பாபு-வின் ஆதரவாளர்கள் எங்களிடம் புடவை வாங்கி கொண்டு எங்களுக்கு வாக்களிக்காமல் தோற்கடித்து விட்டீர்களா என கேள்வி எழுப்பியதோடு, நாங்கள் கொடுத்த புடவையை கட்டி கொண்டு எம்எல்ஏ-விடம் வந்து படுங்கள் என ஆபாசமாகவும், உங்கள் கணவர்களுக்கு நாங்கள் கொடுத்த புடவையை கட்டிவிடுங்கள் என மிகவும் மோசமான வார்த்தைகளால் இழிவாக கூறியதாக அப்பகுதியில் வசிக்கும் பெண்கள் மனவருத்தத்துடன் குற்றம்சாட்டினர்.
இதனால் மனமுடைந்த அப்பகுதி பெண்கள் எம்எல்ஏ மனைவி சார்பில் கொடுக்கப்பட்ட புடவையை குப்பையில் வீசி எறிந்தனர். மேலும் வாக்களிப்பது எங்கள் உரிமை நாங்கள் யாருக்கு வேண்டுமானாலும் வாக்களிப்போம் பொங்கல் பரிசு என்று கூறி எம்எல்ஏ மனைவி சார்பில் புடவையை கொடுத்தார்கள்.
தற்பொழுது தோற்றதால் பெண்களை மிகவும் இழிவாக பேசியதாகவும், நேற்றிரவு முழுவதும் கத்தியுடன் அவருடைய ஆதரவாளர்கள் சுற்றித்திரிந்ததாகவும் தங்களுக்கு பாதுகாப்பு வேண்டி கானத்தூர் காவல் நிலையத்தில் அப்பகுதி பெண்கள் புகார் அளித்துள்ளனர்.
மேலும் படிக்க: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றொரு வழக்கிலும் கைது
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR