எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் போக்குவரத்து கழக ஊழியர்களின் பிரச்சனை குறித்து இறுதிக்கட்ட பேச்சு வார்த்தை நடத்தப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

13_வது ஓய்வூதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும், ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அவர்களின் நிலுவைத்தொகையை கணக்கிட்டு வழங்கிட வேண்டும், போக்குவரத்து துறையில் ஏற்பட்டு இருக்கும் நஷ்டத்துக்கு அரசே பொறுப்பேற்று அதனை ஈடுசெய்ய வேண்டும் உள்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து துறை நிர்வாக பிரதிநிதிகளுடன், தொழிற்சங்க பிரதிநிதிகள் 2 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.


இந்நிலையில், சென்னை பல்லவன் இல்லத்தில் தொழிற்சங் கங்களுடன் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். 


இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால், அறிவித்தபடி நாளை(15-ம் தேதி) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்கும் என்று தொழிற்சங்கங்கள் அறிவித்தனர்.


இன்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெறும் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னரே தெரியவரும் போக்குவரத்து தொழிலாளர்கள் நாளை (திங்கட்கிழமை) முதல் வேலைநிறுத்த போராட்டம் தொடங்குவார்களா? அல்லது வேலைநிறுத்த போராட்ட அறிவிப்பை வாபஸ் பெற்றுக்கொள்வார்களா?