இதமான சூழ்நிலை: தமிழத்தில் அடுத்த 3 நாள் தொடரும் மழை

அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தென் மேற்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் சில இடங்களில் லேசான மழையும், சில இடங்களில் கன மழையும் பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தில் பல இடங்களில் வெப்பத்தின் தாக்கம் குறைந்து இதமான சூழ்நிலை நிலவி வருகிறது. மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யக்கூடும். மேலும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் மக்கள் இரவில் வெளியில் செல்லும் போது பாதுகாப்பாக செல்லுமாறு சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி தெரிவித்துள்ளனர்.