தமிழக அரசியலில் பரப்பரப்பான சூழ்நிலையில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் மும்பையிலிருந்து சென்னை வந்தார். இந்நிலையில், தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், முன்னால் முதலமைச்சர்  ஓ. பன்னீர்செல்வமும் சந்தித்து கைக்குலுக்கினர். அதிமுக அணிகள் இணைந்தன என அறிவிக்கப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதிமுக வழி காட்டுதல் குழுவில் 11 பேர் நியமிக்கப்பட்டனர். ஓ. பன்னீர்செல்வத்துக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படும் எனக் தெரிவிக்கப்பட்டது.


இரட்டை இலை சின்னத்தை மீட்போம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் தனது பேட்டியில் கூறினார். பிறகு இபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிறகு எம்ஜிஆர் நினைவிடத்திற்கும் சென்று அஞ்சலி செலுத்தினார்கள். 


பிறகு ஆளுநர் வித்யாசாகர் ராவ் சந்தித்தனர். ஆளுநர் வித்யாசாகர் ராவ் முன்னிலையில் துணை முதலமைச்சராக ஓ. பன்னீர்செல்வம் பதவி ஏற்றார் மற்றும் மாஃபோ பாண்டியராஜன் தொல்லியல்துறை அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்கள்.


 



 


 



 


 பதவியேற்றப் பின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் கைக்குலுக்கிக் கொண்டனர்.   


வீடியோ: