கோத்தகிரியில் ஒரே நேரத்தில் இரண்டு சிறுத்தைகள் இரண்டு கருஞ்சிறுத்தைகள் உலா வந்த காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி வியப்பை ஏற்படுத்தியுள்ளன. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகேயுள்ள அரவேனு பகுதியில் இருந்து கோட்டாஹால் செல்லும் சாலையில் குடியிருப்பு பகுதியில் நீண்ட நேரமாக உலா வந்த இரண்டு சிறுத்தைகள், இரண்டு கருஞ்சிறுத்தைகளின் காட்சி அப்பகுதி மக்களிடையே பீதியை கிளப்பியுள்ளது. இரண்டு கருச்சிறுத்தைகள் ஒரே நேரத்தில் அப்பகுதியில் சுற்றி வந்த சிசிடிவி காட்சிகளின் பதிவுகள் அரவேனு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி கரடி, காட்டு மாடு, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் உலா வருவது வாடிக்கையாக உள்ளது.


இந்நிலையில் கோத்தகிரி அருகே உள்ள அரவேனு பகுதியில் இருந்து கோட்டாஹால் செல்லும் சாலையில் உள்ள குடியிருப்புகள் அதிகம்  நிறைந்துள்ள பகுதியில் நள்ளிரவில் ஒரே நேரத்தில் குடியிருப்பு முன் உள்ள சாலையில் நீண்ட நேரமாக இரண்டு சிறுத்தைகள், இரண்டு கருஞ்சிறுத்தைகள் உலா வந்துள்ளன.