ஏற்காடு மலையில் மீண்டும் பாறை சரிந்தது சேலத்திலிருந்து ஏற்காடு செல்லும் மலைப்பாதையில் 60 அடி பாலம் பகுதியில் அருகே இரவு 7 மணி அளவில் ராட்சத பாறைகள் உருண்டு விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விடிய விடிய மீட்புப் பணியில் ஈடுபட்ட பணியாளர்கள் சாலையை சீரமைக்கும் பணியில் துரிதமாக செயல்பட்டு சாலையை சீரமைத்து பணியாளர்கள் பாறைகள் வெட்டி அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்றது. பலத்த மழை பெய்ததால் சாலையில் ஆங்காங்கே லேசான மண்சரிவு (Landslide) ஏற்பட்டது. மலைப்பாதையிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதை காணமுடிந்தது.


ALSO READ | Humanity in Rain: மழையில் மலர்ந்து மணம் வீசும் காவல்துறையினரின் மனிதநேயம்


சேலம் மாவட்டம் ஏற்காடு சுற்றுலா தளத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக இன்று மாலை 7 மணிக்கு ஏற்காடு மலை பாதை 60 அடி பாலத்திற்கு அருகில் ராட்சத பாறை ஒன்று சாலையின் ஓரத்தில் சரிந்து விழுந்தது அதை தொடர்ந்து மற்றொரு சிறிய அளவு பாறையும் சரிந்து விழுந்தது. ஒரு வாகனம் மட்டும் செல்லும் அளவிற்கு வழி இருந்து இதனால் வாகனங்க போக்கு வரத்தை ஏற்காடு காவல் துறையினர் சீர் படுத்தி வருகின்றனர்.


 



 


மழை (Rain) பெய்து கெண்டே இருப்பதால் சீரமைப்பு பணி சற்று தாமதமாகவே நடை பெறுகிறது. மேலும் மழை தொடர்ந்தால் மீண்டும் மண் சரிந்து பாறைகள் சாலையில் விழ வாய்ப்புள்ளது. விழுந்த ராட்சத பாறை பொதுப்பணித்துறை அதிகாரிகள் துண்டுகளாக வெட்டி எடுத்து அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் இதனால் ஏற்காடு செல்லும் சாலை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.


ALSO READ | மழை ஓய்ந்துவிடும்: வானிலை மைய அறிவிப்பால் மக்கள் நிம்மதி! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR