கேரளாவில் பொழ்து வரும் தொடர் மழையால் முல்லை பெரியாறு அணையின் நீர்வரத்து கனிசமாக அதிகரித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தென் இந்திய மாநிலங்களில் தொடர்ந்து பொழ்து வரும் தொடர் மழை காரணமாக அணைகள் நிறம்பி வருகின்றன. இந்த வகையில் தற்போது கேரள மாநலத்தில் உள்ள முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 3,438 கனஅடியாக உயர்ந்துள்ளது.


கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதாலும், முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதாலும் அணைக்கு நீர்வரத்து கனிசமாக அதிகரித்துள்ளது. 


இந்நிலையில் நேற்று விநாடிக்கு 730 கனஅடியாக இருந்த நீர்வரத்து, தற்போது விநாடிக்கு 3,438 கனஅடியாக உயர்ந்துள்ளது. இதன்காரணமாக வினாடிக்கு 900 கனஅடி தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப் பட்டு வருகிறது. இந்த நீர்திறப்பு மூலம் தமிழக விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


முன்னதாக தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள கிருஷ்ணகிரி அணையில் நீர்வரத்து அதிகமானதை அடுத்து நொடிக்கு 1600 கனஅடி தண்ணீர் தென்பெண்ணை ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த நீர்திறப்பு மூலம் திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணைக்கு தண்ணீர் வரும் என்பது குறிப்பிடத்தக்கது!