மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 38,916 கன அடியாக உயர்வு!!
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 37,000 கனஅடியில் இருந்து 38,916 கன அடியாக அதிகரித்துள்ளது!!
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 37,000 கனஅடியில் இருந்து 38,916 கன அடியாக அதிகரித்துள்ளது!!
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்துவருவதால் தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள அணைகளில் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.
இதையடுத்து, மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும், 124 முழு கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் 75 அடியை எட்டி உள்ளது. இன்று காலை நேர நிலவரப்படி, அணைக்கு வரும் நீரின் அளவு 37,000 கனஅடியில் இருந்து 38,916 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 75.36 அடியாகவும், நீர் இருப்பு 37.48 டிஎம்சி.,யாகவும் உள்ளது.
இதை தொடர்ந்து மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு சுமார் 1000 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் கிடுகிடு என உயர்ந்து வருவதால் விவசாயிகள் அனைவரும் மகிழ்ந்து வருகின்றனர்.