கனமழை: சாலையில் தேங்கிய நீரை வெளியேற்றும் பணியாளர்கள்

தமிழகத்தில் வளி மண்டல் மேலடுக்கு சுழற்சி காரணமாக வடகிழக்கு பருவமழை தொடங்யுள்ளதால், கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் கூறியிருந்தார். நேற்று முதல் சென்னை மற்றும் அதனை சுற்றி உள்ள புறநகர் பகுதிகளில் விடாமல் அதிகாலை முதல் மழை பெய்கிறது.
பொது மக்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். தொடரும் மழையால் பலர் கவலையில் ஆழ்ந்துள்ளனர். குறிப்பாக மாணவர்கள் மற்றும் அலுவலகம் செல்பவர்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். கன மழை பெய்து வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். மேலும் மழை நிற்காமல் தொடர்ந்து பெய்து வருகிறது.
இன்றும் தொடர்ந்து கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. இதனால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பல சாலைகளில் வெள்ளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மேலும் பல வீடுகளில் தண்ணீர் புகுத்துள்ளது. தண்ணீரை அகற்றும் பணியை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
சாலைகளில் மரங்களும் வீழ்ந்துள்ளன. போக்குவரத்து மிகவும் பாதிப்படைந்துள்ளது. செண்ட்ரல் ரெயில் நிலையத்தில் தண்ணீர் தேங்கியுள்ளதால், ரெயில்கள் வருவதில் தாமதம் ஆகிறது.
நாளை மழை பெய்வது குறையலாம் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.