உண்மையான அதிமுக நாங்கள் தான்: ஓ.பன்னீர்செல்வம்
அதிமுக-வின் பொதுச் செயலாளர் நியமனமே தவறாக இருக்கும்போது, இது எப்படி சாத்தியமாகும்.
பெரம்பலூரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த ஓ. பன்னீர் செல்வம் நிருபர்களிடம் கூறியது:-
தனி குடும்பத்தின் கீழ் கட்சி செயல்படக்கூடாது, ஜெயலலிதா அவர்களின் மரணத்தில் நீதி விசாரணை நடத்த வேண்டும் என்பதுதான் எங்களின் கோரிக்கை.
இதனை ஏற்றுக் கொண்டால் மட்டுமே இரண்டு அணிகளும் ஒன்றாக இணைய வாய்ப்புள்ளது. உண்மையான அதிமுக நாங்கள் தான். இரட்டை இலை சின்னம் எங்களுக்கு தான் கிடைக்கும் என்றார்.
தினகரன் தன்னை நீக்குவதற்கு பொதுச்செயலாளருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்ற கேள்விக்கு பதியளித்த அவர்:-
அதிமுக-வின் பொதுச் செயலாளர் நியமனமே தவறாக இருக்கும்போது, இது எப்படி சாத்தியமாகும் என்றார். தினகரன் கட்சியை வழி நடத்துவது குறித்து ஒன்றரை கோடி தொண்டர்கள்தான் முடிவு செய்வார்கள் என்றும் தெரிவித்தார்.