தமிழக அரசியலில் பரபரபப்பு ஏற்பட்டுற்கும் நிலையில், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் செய்தியாளர்களை இன்று சந்தித்து பேசியது,


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழக அரசு பெரும்பான்மை நிருபிக்க அவசியம் இல்லை. தமிழக அரசு பெரும்பான்மையுடன் தான் உள்ளது. 134 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவும் எடப்பாடி தலைமையிலான அரசுக்கு உள்ளது. எதிர்க்கட்சி தேவையில்லாமல் அரசுக்கு களங்கம் ஏற்படுத்த நினைக்கிறது. 


அரசுக்கும் ஆட்சிக்கு ஏதாவது பிரச்சனை வந்தால் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் ஒன்றாக இணைந்து விடுவோம். மேலும் தினகரன் அணியில் இருக்கும் 18 எம்.எல்.ஏ.க்களும் விரைவில் உண்மையான அதிமுகவில் இணைவார்கள் என நான் நம்புகிறேன் என்று ஜெயராமன் தெரிவித்தார்.