ஜெயலலிதா இல்லம் அரசுடைமையாக்கப்படுவது தொடர்பாக சட்டப் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என ஜெ.தீபா கட்டம்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை தமிழக அரசு அரசுடமையாக்கியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா பூர்வீக சொத்தை அரசு எடுத்துக்கொள்வதில் எங்களுக்கு உடன்பாடில்லை என தெரிவித்துள்ளார். 


இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்... "ஜெயலலிதாவின் வேதா இல்லத்திற்கான மதிப்பீடு தொகை ரூ.68 கோடி என்பது தவறானது. அரசின் நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஜெயலலிதாவால் வாங்கப்பட்ட கடனுக்கு நாங்கள் பொறுப்பேற்றுள்ளோம். இல்லத்திற்குள் எங்களை அனுமதிக்கவே இல்லை. ஜெயலலிதா குடும்ப நிகழ்ச்சிகள் அனைத்தும் வேதா இத்தத்தில்தான் நடந்தன. பூர்வீக சொத்தை அரசு எடுத்துக்கொள்வதில் எங்களுக்கு உடன்பாடில்லை. ஜெயலலிதாவின் வாரிசாக எங்களை நீதிமன்றமே அறிவித்துள்ள நிலையில் எங்களுக்கே உரிமை உள்ளது. 


இல்லத்தில் உள்ள பொருள்களை அரசு நீதிமன்றத்தில் ஒப்படைத்திருக்க வேண்டும். வேதா இல்லத்தில் இருந்த பொருள்களை பட்டியலிட வேண்டும். எம்ஜிஆர் தாம் வாழ்ந்த இல்லத்தை குடும்பத்துக்குதான் விட்டுச் சென்றார். ஜெயலலிதாவின் வேதா இல்லம் மக்களுக்கு போய் சேராது. இது எங்கள் பூர்வீக சொத்து. ஜெயலலிதா பெயரில் அறக்கட்டளை தொடங்க எங்களை அணுகியிருந்தால் நாங்கள் ஒப்புதல் அளித்திருப்போம்.ஜெயலலிதா வீட்டை அரசுடைமையாக்குவதை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்று தடை கேட்பேன்" என அவர் கூறினார். 


ALSO READ | தீபா, தீபக் ஆகியோர் ஜெயலலிதாவின் சொத்துக்கு சட்ட வாரிசுகள்: நீதிமன்ற அறிவிப்பு


ஜெயலலிதாவின் நினைவு இல்லத்தில் முதல்வரின் முகாம் அலுவலகம் எதுவும் அமைக்கப்படாது. சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு நடைமுறைக்கு சாத்தியமில்லை என்பதால், முகாம் அலுவலகம் எதுவும் அமைக்கப்படாது என்றும் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. வேதா இல்லத்தை நினைவில்லமாக்க, நிலத்தைக் கையகப்படுத்துவதற்கான இழப்பீட்டுத் தொகையை சென்னை குடிமையியல் நீதிமன்றத்தில் தமிழக அரசு செலுத்தியைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.