மயிலாடுதுறை மாவட்டம் ,கோவாஞ்சேரி கிராமத்தை சேர்ந்த ஆர்த்திகா என்ற மாணவி உக்ரைன் கார்கிவ் நகரில் மருத்துவம் பயின்று வந்தார். ரஷ்யா போரை தொடங்கியதை அடுத்து தங்களது மகளை மீட்டுத்தருமாறு ஆர்த்திகாவின் பெற்றோர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா மூலம் தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். இந்த நிலையில் நேற்று சென்னை வந்தடைந்த ஆர்த்திகா, இன்று காலை தனது சொந்த ஊரான கோவாஞ்சேரிக்கு வந்தடைந்தார். அவருக்கு பூம்புகார் எம்.எல்.ஏ.நிவேதா முருகன் சால்வை அணிவித்தும், இனிப்பு கொடுத்தும் வரவேற்பளித்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | உக்ரைன் ராணுவத்தில் கோவை மாணவர் - பேனா பிடித்த கைகளில் துப்பாக்கி ஏந்திய பின்னணி!


இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாணவி ஆர்த்திகா, கார்கிவ் வில் இருந்து போலந்து எல்லைக்கு வருவதற்கு மிகவும் சிரமப்பட்டதாகவும், ஒரு நாள் முழுக்க நடந்தே பல கிலோ மீட்டர் பயணித்ததாகவும் குறிப்பிட்டார். மைனஸ் 2  டிகிரி குளிரில் பயணித்தபோது உக்ரைனியர்களுக்கு மட்டும் போர்வைகள் வழங்கப்பட்டதாக வேதனை தெரிவித்த அவர், போலந்து எல்லையை கடந்த பின் இந்திய தூதரகத்தில் நன்கு கவனித்துக் கொண்டதாகவும் தெரிவித்தார். 


 



டெல்லி வந்த பின் தமிழ்நாடு இல்லத்திலும் தங்களை நன்கு உபசரித்ததாகவும், மத்திய, மாநில அரசுகளின் முயற்சியால் நல்லமுறையில் வீட்டிற்கு வந்து சேர்ந்ததாகவும் குறிப்பிட்டார். உக்ரைனில் சிக்கியுள்ள மற்ற மாணவர்களையும் விரைவாக மீட்க வேண்டுமென கோரிக்கை விடுத்த ஆர்த்திகா, தங்களது படிப்பை தொடர்வதற்கும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.


மேலும் படிக்க | உக்ரைன் நெருக்கடி இந்தியா- ரஷ்யா உறவில் பாதிப்பை ஏற்படுத்துமா ..!!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR