திண்டுக்கல் பாஜக கிழக்கு மாவட்ட சார்பாக உறுப்பினர் சேர்க்கை மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை திண்டுக்கல்லில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்ற வருகிறது. இதில் பாஜக தமிழக மாநில ஒருங்கிணைப்பாளர் மற்றும் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கலந்து கொண்டார். பாஜக மாநில ஒருங்கிணைப்பாளர் எச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்து கூறும்போது, "திராவிட மாடல் ஆட்சி எல்லா விதங்களிலும் துறைகளிலும் மக்கள் விரோதமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. பல மடங்கு சொத்து வரி உயர்த்திய பிறகும் வருடத்திற்கு 6% சொத்து வரி உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நகர்புற நடுத்தர மக்களைப் பற்றி அக்கரை இல்லாத அரசாங்கம். கிராமத்தில் உள்ள பால் உற்பத்தியாளர்களுக்கு எதிராக செயல்படும் அரசாங்கமாகவும் உள்ளது. ஒரு லிட்டர் பாலுக்கு ரூ 3 ஊக்கத்தொகை கொடுத்த நிலையில் தற்போது அவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. முதல்வருக்கு தனது குடும்பத்தை அடுத்த கட்டத்திற்கும், மகனை முதல்வராக கொண்டுவர வேண்டும் என்பதை தவிர மக்கள் மீது எந்த அக்கறையும் இல்லை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க - கத்தியை காட்டி மிரட்டி... மனைவி, மகனை கடத்திய பாஜக பிரமுகர்... வெளியான பகீர் சிசிடிவி காட்சிகள் - பின்னணி என்ன?


தமிழின தலைவன், திராவிட மாடல் என கூறிக் கொள்பவர்கள் அடுத்த தலைமுறையை பற்றி கவலைப்படுகிறார்களா? நேற்று உளுந்தூர் பேட்டையில் ஒரு நாடகம் நடைபெற்றது. டாஸ்மார்க்கு திறக்கின்ற சாவி மாநில அரசிடமும் அதை மூடுகின்ற சாவி மத்திய அரசிடம் உள்ளதாம் இது மிகப்பெரிய பித்தலாட்டம். அரசியல் மோசடியின் ஒட்டுமொத்த நாடகம். தமிழகத்தில் சாராய உற்பத்திய அதிகமாக செய்பவர்கள் திமுகவினர். அதற்கு பூட்டு போடாமல் எதற்கு இந்த மாநாடு? அதனை நடத்துகிற ஆர்எஸ் பாரதி அருகிலேயே அமர்ந்துள்ளார். மது உற்பத்தியாளர்கள் பங்குபெறும் மாநாடா? நேற்று பெண் காவலர் ஒருவரை அடித்து துவைத்து தூக்கி எறிந்துள்ளனர் இதுதான் விசிக-வின் உருவம். சரக்கு, மிடுக்கு, பேச்சுக்கு சொந்தக்காரர் நடத்தும் மாநாட்டில் பெண்களுக்கு அவ்வாறே நடைபெறும். நாகரிகமான நடவடிக்கை இருக்காது. திருமாவளவன் சரக்கு மிடுக்கு உடன் பேசும் போதே அவரை கண்டித்து இருந்தேன். ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்காக தலைவர் உழைப்பது சரியானது.  குறிப்பிட்ட சாதியை பெயரை குறிப்பிட்டு பெண்களை இழிவு படுத்துவது சரியானதா?


மாநாட்டில் சரக்கு போட்டு கொண்டு செல்கின்றனர் பெண் காவலர்கள் மீது கை வைத்து தாக்குகின்றனர். காந்தி தனது தாயாருக்கு மது அருந்துவதில்லை, மாமிசம் உண்ணுவது இல்லை, பிற பெண்களை பார்ப்பது இல்லை என்று சத்தியம் செய்துள்ளார். ஆனால் தற்போது காந்தி மண்டபத்தில் மது பாட்டிலா? ஆளுநர் பேசுவதை பார்த்து சட்ட அமைச்சருக்கு கோபம் வருகிறது. ஆளுநர் சரியாக பேசியுள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளில் தலித் மக்களுக்கு எதிரான குற்றங்கள் 50% அதிகரித்துள்ளது எனக் கூறியுள்ளார். அது மோசடி சமூகநீதி கும்பல் ஆட்சி செய்கின்ற இடத்தில் நடக்கிறது. எனவே சமுதாயம் முன்னேற்றத்தில் அக்கறை உள்ள எல்லோரும் புறக்கணிக்க வேண்டிய ஆட்சி என்றால் அது திராவிட ஆட்சி தான். 


இந்த ஆட்சியினால் தலித் மக்களுக்கு பயனில்லை மக்களுக்கு இளைஞர்களுக்கு வழிகாட்டு ஆளில்லை. முதல்வர் மது அருந்தாதே போதை பொருளை தொடாதே என பேச வேண்டும். 48,000 கோடி மது விற்பனை என அறிவிப்பு வருகிறது மது விற்பனையை அதிகரிக்கவில்லை என்றால் அதிகாரிகளுக்கு நோட்டீஸ் செல்கிறது. இந்த திராவிட மாடல் அரசு எவ்வளவு விரைவாக தமிழகத்தை விட்டு தூக்கி எறியப்படுகிறதோ அவ்வளவு தமிழகத்திற்கு நல்லது. இந்த அரசு சீர்கேட்டிற்கான அரசு. மதுக்கடை திறந்து வைத்திருக்கின்ற அரசாங்கத்திற்கு எதிராக போராடுவேன். எதிர்த்து நிற்பேன் சிறுத்தையாக பாய்வேன் என கூற வேண்டும் ஆனால் அவர்களையே கூட்டி வந்து அருகில் அமர்த்தி திருமாவளவன் நாடகம் போடுகிறார். பீகார் மிசோரம் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் மதுவிலக்கு அமலில் உள்ளது. அவர்கள் மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கவில்லை. 


இந்தியாவில் இரண்டு பொருள்களுக்கு மட்டும் ஜிஎஸ்டி கிடையாது. பெட்ரோலியம் பொருட்கள் மற்றும் மனிதன் உட்கொள்ளும் மது இவை இரண்டும் மாநில அரசின் கைகளில் உள்ளது. டாஸ்மார்க் மதுவில் போதை வரவில்லை என சந்துக்கடை சரக்கை மக்கள் அருந்துகிறார்கள் என துரைமுருகன் கூறுகிறார். அதனை தடுக்க வேண்டும் என்றால் காவல்துறையை மத்திய அரசிடம் கொடுக்கத் தயாரா? சட்ட ஒழுங்கை மத்திய அரசிடம் மாற்றி விடலாமா? மக்களை திரட்டினேன் நடனம் ஆடினேன் கைத்தட்டினேன் என்பது மக்களை ஏமாற்றும் வேலை. ஜாடிக்கு மூடி போல் திமுகவும் விசிக-வும் மக்களை ஏமாற்றுகின்றனர். எனவே இந்த கும்பலை வீட்டுக்கு அனுப்ப முடிவெடுக்க வேண்டும். 


நடிகர் விஜய் மாநாடு நடத்துவதற்கு எனது வாழ்த்துக்கள். 18 வயதான அனைவரும் மக்களுக்காக போராடவும் அரசியலுக்கு வரவும் உரிமை உள்ளது. அதனை நடிகர் விஜய் ஏன் மறுக்கப் போகிறோம். ஆனால் கொள்கை ரீதியாக அவரின் திட்டங்களை கூறட்டும். திருமாவளவன் அமைச்சரவையில் இடம் வேண்டும் என கூறுகிறார். அதனை நான் நியாயமானது எனக் கூறினேன். நாங்கள் 2014, 2019 மற்றும் 2024 எங்களது கூட்டணியில் உள்ள பலருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. பாஜகவிடம் கூட்டணி நேர்மை உள்ளது. திமுகவிற்கு கூட்டணி நேர்மை கிடையாது. திருமாவளவன் அமைச்சரவையில் இடம் கேட்டதை ஆதரிக்கிறோம். நேற்று நடந்த நாடகத்தை ஆதரிக்கவில்லை அந்த வகையில் விஜய் மாநாட்டிற்கு வாழ்த்துக்கள். 


விஜய் மாநாட்டில் கொள்கையை கூறட்டும் அதன் பின்பு அதைப்பற்றி பேசலாம். தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு என்பது பேப்பரில் மட்டும் உள்ளது. காந்தி மண்டபத்தில் மது பாட்டில் இருக்கிறது என்றால் சட்ட ஒழுங்கு நன்றாக உள்ளது என்று நான் எப்படி கூற முடியும். திருப்பூராவில் முதல் தேர்தலில் பாஜகவிற்கு ஒரு சதவீதம் அடுத்த தேர்தலில் 46 எம்எல்ஏக்கள் மாற்றத்தை கொண்டு வருவதற்காக தமிழ்நாட்டில் உழைத்து வருகிறோம். துணை முதல்வர் என்பது லேபில்தான். சனாதன ஹிந்து தர்மத்தை மலேரியா போல் டெங்கு கொசு போல் ஒழிப்போம் என்பது கருத்து இதனால் மாற்றம் வரப்போவதில்லை. திருமாவளவனின் கனவு காணும் உரிமையை மறுக்க வேண்டாம். விஜய் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தது மற்றும் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாதது குறித்த கேள்விக்கு, திமுகவுடன் பங்காளி சண்டை அவர்கள் வாக்கினை பிரித்துக் கொள்ளப் போகிறார்கள் அதை பற்றி நாங்கள் ஏன் கவலைப்பட வேண்டும். நான் a டீம் மற்றும் b டீம் பற்றி பேசுவது இல்லை" என தெரிவித்தார்.


மேலும் படிக்க - கணவனின் தகாத உறவு! தட்டிக்கேட்ட மனைவிக்கு அடிஉதை - பறிபோன உயிர்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ