தமிழகத்தில் வெப்பநிலை இயல்பான அளவை விட அதிகமாக இருக்கும்: IMD Chennai
சென்னையில் அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்சம் 26 டிகிரி செல்சியஸ் அகவும் வெப்பநிலை பதிவாகும்.
தென்மாநிலங்களில் வெயில் காலம் தொடங்கியுள்ளதால், நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் எப்பொழுதும் இருக்கும் இயல்பை விட, சில இடங்களில் அதிக அளவில் வெப்பம் அதிகரித்துள்ளது. வெப்பத்துடன் சேர்ந்து காற்று வீசுவதால் மக்கள் அவதி அடைந்துள்ளனர்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அடுத்த ஐந்து நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
தமிழ்நாட்டின் வெப்பநிலை பொருத்த வரை சில பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாகவே இருக்கும். இதேநிலை தான் நாளையும் தமிழகத்தில் தொடரும்.
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானிலை பொதுவாக மேகமூட்டமாக இருந்தாலும், சென்னையில் அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்சம் 26 டிகிரி செல்சியஸ் அகவும் வெப்பநிலை பதிவாகும்.
தென் இந்தியாவை பொருத்த வரை தமிழ்நாடு, கரையோர ஆந்திரா, ராயலசீமா, தெலுங்கானா மற்றும் வட கர்நாடக என சில பகுதிகளில் 2-3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகபட்சமாக இருக்கும்.
இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.