சென்னை: தமிழகத்தில் இன்று முதல் மே 15ஆம் தேதி வரை பரவலாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு வெளியிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குமரிக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் இன்று முதல் 15-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது.


இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று வெளியிட்ட அறிக்கை இது:
குமரிக் கடல் மற்றும் அதை ஒட்டிய தென் தமிழக பகுதிகளில் 1.5 முதல் 3.1 கி.மீ. உயரம் வரை வளிமண்டல மேல டுக்கு சுழற்சி நிலவுவதால் 12-ம் தேதி முதல் வரும் 15-ம் தேதி வரை தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும்.


Also Read | சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு பதிவு கட்டணம் விலக்கு – தமிழக அரசு


மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், டெல்டா, தரும புரி, சேலம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள், காரைக்காலில் 12-ம் தேதியும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்களில் 13-ம் தேதி லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.


14-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், வடபகுதி உள் மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழையும்.  கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி, தென்காசி மாவட்டங்களில் கனமழை யும் பெய்யும். 15-ம் தேதி தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும்.  தென் மாவட்டங்களில் கனமழை முதல் அடைமழை பெய்யும்.


கடலோர மாவட்டங்களில் காற்றில் ஈரப்பதம் 50 முதல் 90 சதவீதம் வரை உள்ளதால், காற்றின் இயல்பான வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக உணரப்படும். தென்மேற்கு திசையில் இருந்து காற்று வீச வாய்ப்பு உள்ளதால் கடலோரம் மற்றும் அதை ஒட்டிய உள் மாவட்டங்களில் வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.


Also Read | Chennai: ஜூஸ் பவுடரில் 2.5 கிலோ தங்கத் துகள்கள் கடத்தல் 


11-ம் தேதி காலையுடன் முடிந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ராமேசுவரம், விளாத்திகுளத்தில் 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தென் அரபிக்கடல் பகுதியில் நிலவும் வளி மண்டல சுழற்சியால் அரபிக் கடல் பகுதியிலும் லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளிலும் 12 மற்றும் 13-ம் தேதி களில் சூறாவளிக் காற்று 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 


“14-ம் தேதி புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால் 14, 15-ம் தேதிகளில் சூறாவளி காற்று 60 கி.மீ. வேகத்தில் வீசும். இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்” என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.


Also Read | MDMK: ஏழு தமிழர்களை விடுதலை செய்க! வைகோ வேண்டுகோள்


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR