அரசு திட்டங்களால் பயனடைந்தவர், உரிய நன்றி தெரிவிப்பர் -EPS!
அரசின் திட்டங்களால் பயனடைந்தவர்கள் உரிய நன்றியை தெரிவிப்பார்கள் என நம்புகிறேன் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்!
அரசின் திட்டங்களால் பயனடைந்தவர்கள் உரிய நன்றியை தெரிவிப்பார்கள் என நம்புகிறேன் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்!
சேலம் நேரு கலையரங்களில் இன்று நடைப்பெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு, நலத்திட்ட உதவிகளை வழங்கியப் பின்னர் முதல்வர் பழனிசாமி இந்த கருத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர்., தமிழகத்தில் முதல் முறையாக சேலத்தில் இரண்டடுக்கு மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு செயல்படுத்தும் நலத்திட்டத்தின் பயன்கள் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடைந்து வருகிறது என பெருமிதம் தெரிவித்தார்.
மேலும், சேலத்தில் நவீன கால்நடை பூங்கா அமைக்கப்படும். சிறு, குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட உள்ள ரூ.6000 திட்டம் மகத்தான உன்னதமான திட்டம் எனவும் தெரிவித்தார்.
எதிர்வரும் மக்களவை தேர்தலை குறிவைத்து பேசிய அவர், அரசின் திட்டங்களால் பயனடைந்தவர்கள் உரிய முறையில் நன்றியை தெரிவிப்பார்கள் என்று நம்புகிறேன் எனவும் குறிப்பிட்டு பேசினார்.
மேலும் "அரசின் ஈராண்டு சாதனைகள்" மலரை வெளியிட்டு, செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அமைக்கப்பட்ட ஈராண்டு சாதனைகள் புகைப்பட விளக்க கண்காட்சியை துவக்கி வைத்து பார்வையிட்டார்.
முன்னதாக இன்று நடைபெற்ற அரசு விழாவில், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடனுதவிகள், அம்மா இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதேப்போல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், இந்திய இராணுவத்தை பறைசாற்றும் வகையில், 1971-ல் நடைபெற்ற இந்தியா பாகிஸ்தான் போரில் இந்திய இராணுவத்தில் பெரும்பங்காற்றிய டி-55 ரக பீரங்கியினை பொதுமக்களின் பார்வைக்கு திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வானிலை தகவல் பலகையினை திறந்து வைத்தார்.