IMD எச்சரிக்கை.. 11 மாவட்டங்களை சூழும் கரு மேகங்கள், வீட்டை விட்டு வெளியேற முன் கவனம்
IMD Rain Alert: தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளாவில் அக்டோபர் 9 முதல் 11 வரை கனமழை பெய்யும். அதன்பின் மழைப்பொழிவுக் குறைய வாய்ப்பு உள்ளது.
Alert Weather Update In India: அடுத்த சில நாட்களில் தென்னிந்தியாவின் பல பகுதிகளில் மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி, இந்திய வானிலை ஆய்வு மையத்தின்(IMD) கூற்றுப்படி, அடுத்த 3 நாட்களுக்கு தென் மாநிலங்களில் தமிழ்நாடு,, கர்நாடகா மற்றும் கேரளாவில் கடலோர பகுதிகளில் கனமழை பெய்யும் என எதிர் பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் மிதமான மழை
அதேபோல தமிழ்நாட்டை பொறுத்த வரை ஏற்கனவே பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை 11 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் மிதமான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க - மழை காலத்தில் துணிகள் காயவில்லையா? இந்த முறையை பின்பற்றுங்கள்! துர்நாற்றம் வராது!
தென்மேற்கு பருவமழை நிலவரம்
இன்று அக்டோபர் 9 ஆம் தேதி தென்மேற்கு பருவமழை வடமேற்கு இந்தியா, மத்திய இந்தியா, மகாராஷ்டிராவின் கிழக்கு மற்றும் வட இந்தியாவின் சில பகுதிகளிலிருந்து விலகி உத்தரப் பிரதேசம், கிழக்கு மத்தியப் பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், தெலுங்கானா, வட கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்திய அரபிக்கடல் நோக்கி செல்வதால், சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும் எனக் கூறப்பட்டு உள்ளது.
தென் இந்தியா
அக்டோபர் 11 ஆம் தேதி வரை தமிழகம், தெற்கு கர்நாடகா, கேரளாவில் சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதன் பிறகு அது குறையும்.
மேலும் படிக்க - கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்ல திட்டமா? இத தெரிஞ்சுக்கிட்டு போங்க!
வடகிழக்கு இந்தியா
அருணாச்சலப் பிரதேசம், அசாம் மற்றும் மேகாலயாவில் பல இடங்களில் திங்கள்கிழமை லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்தது. இது தவிர, சில இடங்களில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
கிழக்கு இந்தியா
அடுத்த இரண்டு நாட்களுக்கு இமயமலை, மேற்கு வங்காளம் மற்றும் சிக்கிமில் பல இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதன் பிறகு அது குறையும்.
வடமேற்கு இந்தியா
அக்டோபர் 9 மற்றும் 10 மற்றும் அக்டோபர் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் காஷ்மீர், கில்கிட், பால்டிஸ்தான், முசாபராபாத், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசான மழை எதிர் பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க - போட்டியே நடக்காது, ஆனா கப்பு ஜெய்க்கலாம்; உலக்கோப்பைக்கு வார்னிங் கொடுக்கும் மழை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ