சென்னை: தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இன்று முதல் ஏப்ரல் 7 வரை அதிகபட்ச வெப்பநிலை அதிகரிக்க உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட ஐந்து டிகிரி செல்சியஸ் உயரத் தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை ஆய்வு மையம் அறிக்கையின்படி, தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் பகல் நேரத்தில் வெப்பநிலை (Temperature) உயர்ந்து இருக்கும். ஏனென்றால், வடமேற்கு திசையில் இருந்து தமிழக மாவட்டங்களை நோக்கி தரைக்காற்று வீசுவதால், சென்னை, காஞ்சிபுரம், சேலம், மதுரை உட்பட 27 மாவட்டங்களில் வெப்பத்துடன் கூடிய தரைக்காற்று வீசும் என்பதால், வெப்பத்தின் தாக்கம் சில மாவட்டங்களில் நான்கிலிருந்து ஐந்து டிகிரி செல்சியஸ் வரையும், சில மாவட்டங்களில் நான்கிலிருந்து ஆறு டிகிரி செல்சியஸ் வரையும் வெப்பநிலை உயரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் (Regional Meteorological Centre, Chennai) அறிவித்துள்ளது.


வெப்பச்சலனம் காரணமாக இன்று முதல் 07 ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய இலேசான மழை பெய்யக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.


ALSO READ | மோடி அரசாங்கத்தின் இந்த முடிவால் அரசாங்க வங்கிகளுக்கு பெரிய ஆப்பு!


சென்னை (Chennai) பொறுத்துவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் (Degrees Celsius) மற்றும் குறைந்தபட்ச 28 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும். வேலூர் மாநிலத்தில் 43.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை பதிவு செய்துள்ளதாக வானிலை ஆய்வு அதிகாரிகள் தெரிவித்தனர். சேலம், திருச்சி, மதுரை, ஈரோடு மற்றும் திருத்தணி ஆகியவை பகுதியில் 42 டிகிரி செல்சியஸுக்கு மேல் அதிகபட்ச வெப்பநிலையை பதிவு செய்ததால், பெரும்பாலான இடங்களில் அதிக வெப்பநிலை நிலவியது.


நேற்று அந்தமான் கடல் (Andaman Sea) பகுதியில் காற்றத்த தாழ்வு மண்டலம் அடுத்த 6 மணி நேரத்திற்கு வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும். இதன் காரணமாக வடக்கு அந்தமான் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் 40-50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், இந்த பகுதிகளுக்கு மீன் பிடிக்கும் செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.


ALSO READ | ஜூம் மீட்டிங்கில் கேமிரா முன் நிர்வாணமாக தோன்றிய மனைவி; தர்மசங்கடத்தில் தலைவர்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR