சென்னை: எர்ணாகுளம் மற்றும் ராமேஸ்வரம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதாவது இந்த மாதம் மற்றும் அடுத்த மாதம் எர்ணாகுளம் தொடங்கி திருச்சூர், பாலக்காடு, பொள்ளாச்சி, உடுமலை, பழனி, மதுரை வழியாக ராமேஸ்வரம் வரை இயக்கப்படும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எர்ணாகுளத்தில் இருந்து ஜனவரி 9, 16, 23, 30 மற்றும் பிப்ரவரி 6, 13, 20, 27 ஆம் தேதிகளில் இரவு 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7:30 மணிக்கு ராமேஸ்வரம் வந்தடையும். 


அதேபோல ராமேஸ்வரத்தில் இருந்து ஜனவரி 10, 17, 24, 31 மற்றும் பிப்ரவரி 7, 14, 21, 28 ஆம் தேதிகளில் மாலை 4 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4:30 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும். 


அதன் விவரங்கள்: 


எர்ணாகுளம் டு ராமேஸ்வரம் - சிறப்பு ரயில் எண் 06045



ராமேஸ்வரம் டு எர்ணாகுளம் - சிறப்பு ரயில் எண் 06046 



உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.