சென்னை சின்ன போருரில் நாம் தமிழர் கட்சி சார்பில் இரட்டைமலை சீனிவாசன் நினைவு நாளை முன்னிட்டு அவரது புகைப்படத்திற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் அவரது புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் , "ஆளுநர் நியமனம் செய்வது மத்தியில் ஆளும் கட்சி தான் செய்யும். அவர்களுக்கு வேண்டியவர்களை நெறுங்கியவர்களை நியமனம் செய்வார்கள்.  ஓய்வு பெற்ற நீதிபதி, ஐஏஎஸ் ஆகியோரை ஆளுநர்களாக போடவேண்டும்.   நீதிபதிகள் எல்லாம் எதையோ எதிர்பார்த்து அந்த பொறுப்பில்  இருந்தால் நீதி எப்படி இருக்கும்? கடைசியாக நம்பி இருப்பது நீதிமன்றத்தை தான்.  மக்களை சந்திப்பவர்கள் ஆளுநர்களாக போடவேண்டும், இந்த நியமனங்களில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


நீட் தேர்வில் அனிதா இறப்பு குறித்து திமுக அரசியல் செய்துவிட்டு தற்போது நீட் தேர்வு தற்கொலை குறித்து அரசியல் பேச வேண்டாம் என கூறுகிறது. மாநில அரசு இயற்றுகிற சட்டத்தை மதிக்காத மத்திய அரசின் சட்டத்தை ஏன் மாநில அரசு மதிக்க வேண்டும்.  போர்ட் நிறுவனம் தமிழகத்தை விட்டு வெளியேறியது தொடர்பாக கேட்கபட்ட கேள்விக்கு,  தெற்காசிய நாடுகளில் பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவை நோக்கி வர இங்கு நிலத்தடி நீர்,மலிவு விலை மனித உழைப்பு இருப்பதால் இங்கு வருகிறார்கள். இதில் நீர் ஆதாரம் குறைந்தால் இங்கிருந்து கிளம்பிவிடுவார்கள் என கூறினார்.


சமூக நீதிக்காக பெரியார் மட்டும் தான் போராடினார் என்பதை தான் எதிர்கிறேன். பெரியார் போன்று தமிழகத்தில் பலர் போராடியுள்ளனர்.  சமூக நீதி என்றால் என்ன என திமுக தலைவர் ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும்.  கடந்த 70 ஆண்டுகளில் விற்க முடியாததை 7 ஆண்டுகளில் விற்பனை செய்து பிரதமர் மோடி சாதனை செய்துள்ளார்.  ஒரே நாடு,ஒரே கல்வி,ஒரே நீட் என்றும் கூறும் மத்திய அரசு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த முடியாதா என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். 



மேலும், திமுக தங்களை நேர்மையாளர்கள் என காட்டிக்கொள்ள நினைக்கிறார்கள். ஊழல், லஞ்சத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தியது திமுக தான்.  தமிழகத்தில் எந்த தீய திட்டத்திற்கும் வேர் தேடி போனால் திமுக தான் இருக்கும் என கூறினார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR